Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசை.. பந்துவீச்சில் ஒரே இந்திய வீரர் அஸ்வினுக்கு 10-வது இடம்…

துபாய்: ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் பேட்டிங்கில் விராட் கோலி 4-ம் இடத்தில் உள்ளார். ஷிகர் தவான் 7-ம் இடத்திலும், கேப்டன் தோனி 8-ம் இடத்திலும் உள்ளனர். சுரேஷ் ரெய்னா 2 இடங்கள் முன்னேறி 18-ம் இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் தர வரிசையில் டிவில்லியர்ஸ் 902 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை விட 42 புள்ளிகள் குறைவாக உள்ள சங்கக்காரா 2-ம் இடத்தில் உள்ளார். ஹசிம் ஆம்லா, விராட் கோலி, தில்ஷன், வில்லியம்சன், ஷிகர் தவான், தோனி, ராஸ் டெய்லர், கிளென் மேக்ஸ்வெல் டாப் 10 பேட்டிங்கில் இடம் பிடித்துள்ளனர்.

Indian spinner Ashwin has jumped two places to the 10 th position in the ICC .

1. 902 - டி.வில்லியர்ஸ்
2. 860 - சங்கக்கரா
3. 828 - ஹசிம் அம்லா
4. 802 - விராட்கோலி
5. 793 - தில்ஷான்
6. 786 - வில்லிய்மசன்
7. 777 - ஷிகர் தவான்
8. 734 - டோணி
9. 732 - டெய்லர்
10. 720 - கிளென் மேக்ஸ்வெல்

பந்து வீச்சு பிரிவில் இந்திய வீரர் அஸ்வின் டாப் 10 ல் அடியெடுத்து வைத்துள்ளார். அஸ்வின் 2 இடங்கள் முன்னேறி 10-ம் இடம் பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரர் முகமது ஷமி 12-ம் இடத்தில் உள்ளார். பவுலிங் தர வரிசையில் மிச்செல் ஸ்டார்க் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

1. 783 - ஸ்டார்க்
2. 734 - இம்ரான் தாஹிர்
3. 727 - போல்ட்
4. 717 - ஸ்டெயின்
5. 709 - சுனில் நரின்
6. 693 - ஜான்சன்
7. 682 - சயீத் அஜ்மல்
8. 680 - ஷாஹிப் அல் ஹசன்
9. 666 - மோர்கல்
10. 654 - அஸ்வின்

பந்து வீச்சு வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 26, 2015, 9:06 [IST]
Other articles published on Jun 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+