For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான டீம்.... அறிவிச்சுட்டாங்க அப்பு... சூப்பர் டீமால்ல இருக்கு!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அடுத்த மாதம் 11ம் தேதி துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடவடிக்கையில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

இதற்கான அணியை தேர்ந்தெடுக்கும் பணியில் தேர்வுக்குழு இன்றைய தினம் ஈடுபட்ட நிலையில் தற்போது அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஐபிஎல்? பிசிசிஐக்கு கிடைத்த புதிய வாய்ப்பு... தோள்கொடுத்த அண்டை நாடு! மீண்டும் ஐபிஎல்? பிசிசிஐக்கு கிடைத்த புதிய வாய்ப்பு... தோள்கொடுத்த அண்டை நாடு!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஐபிஎல் 2021 தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தொடரின் 29 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அந்த தொடர் மீண்டும் எங்கே எப்போது நடைபெறும் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

வரும் 11ம் தேதி துவக்கம்

வரும் 11ம் தேதி துவக்கம்

இந்நிலையில் அடுத்ததாக வரும் மாதம் 11ம் தேதி துவங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நடவடிக்கையில் தற்போது பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இதற்கான அணி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. தேர்வுக்குழு இன்றைய தினம் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டது.

வீரர்கள் தேர்வு

வீரர்கள் தேர்வு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட தொடர் போன்றவற்றை சேர்த்து இந்திய அணி தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு கூடிய இந்திய தேர்வுக்குழு 20 பேர் கொண்ட அணி வீரர்களை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இன்றைய தினம் அறிவிப்பு

இன்றைய தினம் அறிவிப்பு

அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் துணை கேப்டனாக அஜிங்க்யா ரஹானே அறிவிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆப்ஷனாக விரித்திமான் சாஹா உள்ளார். மேலும் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம்

பிட்னசை நிரூபிக்கும் கட்டாயம்

ஹனுமா விஹாரி, ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், சுந்தர்,பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, சிராஜ், தாக்கூர், யாதவ், கேஎல் ராகுல் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. இதில் ராகுல் மற்றும் சாஹா ஆகியோர் தங்களது பிட்னசை நிரூபிப்பதன்மூலம் தங்களது இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார்கள்.

முன்னதாகவே பயணம்

முன்னதாகவே பயணம்

இதேபோல கடந்த தொடரில் இடம்பெற்ற பிரசித் கிருஷ்ணாவுக்கும் இந்த தொடரில் இடம்கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணி ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்துக்கு புறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மாறாக கொரோனா மற்றும் லாக்டவுன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முன்னதாகவே பயணம் மேற்கொள்ளப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, May 7, 2021, 20:15 [IST]
Other articles published on May 7, 2021
English summary
Indian team for World test Championship finals announced
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X