Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்கெட்ச் போட்டு தூக்கும் தோனி.. ரோஹித் சர்மா டீமின் முக்கிய தலைகளுக்கு குறி.. இன்று மிக முக்கிய நாள்

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடி வரும் முக்கியமான வீரர்களை அடுத்த வருட சீசனில் ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு வருகிறது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடக்க உள்ளது. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடக்க உள்ளது.

இன்று மும்பையை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வெல்ல டெல்லி திட்டமிட்டுள்ளது. சாம்பியன்ஷிப்பை தக்க வைத்துக்கொள்ள மும்பை திட்டமிட்டு வருகிறது.

நிலைமை எப்படி

நிலைமை எப்படி

இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரின் ஏலத்திற்கான ஏற்பாடுகள் இப்போதே நடக்க தொடங்கிவிட்டது. அடுத்த ஐபிஎல் தொடருக்கான ஏலம் வரும் பிப்ரவரி மாதம் நடக்க உள்ளது. ஏப்ரல்- மே மாதங்களில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆட கூடிய முக்கியமான வீரர்களை அடுத்த வருட சீசனில் ஏலம் எடுக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டு வருகிறது. பொதுவாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியே விடும் வீரர்களை அணியில் எடுத்து அவர்களை வைத்து கோப்பையை வெல்லும் திறமை கொண்டது சிஎஸ்கே அணி.. மும்பை வேண்டாம் என்று கூறும் வீரர்களை அணியில் எடுத்து அவர்களை வைத்தே சிஎஸ்கே மும்பையை பல முறை வீழ்த்தி உள்ளது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

ஹர்பஜன், அம்பதி ராயுடு, பிராவோ போன்ற வீரர்கள் ஒரு காலத்தில் மும்பை அணியில் விளையாடிய வீரர்கள்தான். அதேபோல் சில வெளிநாட்டு வீரர்களும் கூட இரண்டு அணிக்கும் மாறி மாறி விளையாடி உள்ளனர். இதனால் அடுத்த சீசனிலும் மும்பை அணிக்கு சிஎஸ்கே இதே போல செக் வைக்க போகிறது என்று கூறுகிறார்கள்.அடுத்த வருட ஏலத்தில் மும்பை அணி ஐந்து வீரர்களை ரீ டெயின் செய்து தக்க வைக்க முடியும்.

5 வீரர்கள்

5 வீரர்கள்

அதன்படி மும்பை அணியில் ரோஹித் சர்மா, பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா,டி காக் அல்லது போல்ட் ஆகியோர் தக்க வைக்கப்படுவார்கள்.இதனால் மீதம் இருக்கும் வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள். இதில் முக்கியமான வீரர்களை சிஎஸ்கே அணி ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறது என்று கூறுகிறார்கள்.

பலர் வருவார்கள்

பலர் வருவார்கள்

முக்கியமாக ஸ்பின் பவுலர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது. அதன்படி ராகுல் சகாரை சிஎஸ்கே அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. சிஎஸ்கேவில் நல்ல ஸ்பின் பவுலர்கள் இல்லாத காரணத்தால் இவர் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இஷான் கிஷான், சூர்ய குமார் யாதவ் ஆகியோரும் சிஎஸ்கே அணியில் எடுக்கப்படலாம்.

யார் எல்லாம்

யார் எல்லாம்

சிஎஸ்கே அணி இவர்களை அணியில் எடுக்க எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யும். இன்னொரு பக்கம் கிரிஸ் லைன், பாட்டின்சன் ஆகியோரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. இன்று மும்பை அணியில் ஆடும் வீரர்கள் யார் என்று சிஎஸ்கே கவனித்து வருகிறது. இன்று மும்பை அணியில் ஆடாமல் பெஞ்சில் இருக்கும் பல வீரர்களை சிஎஸ்கே அடுத்த வருடம் தூக்க வாய்ப்புள்ளது.

பெஞ்சில் உள்ள வீரர்கள்

பெஞ்சில் உள்ள வீரர்கள்

இந்த சீசனில் கிறிஸ் லைன், பாட்டின்சன் ஆகியோருக்கு பெரிய அளவில் மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை . சோரப் திவாரி, தவால் குல்கர்னி போன்ற வீரர்களும் கூட மும்பை அணியில் பெரிய அளவில் வாய்ப்பு பெறவில்லை. இவர்களையும்கூட சிஎஸ்கே அணி நிர்வாகம் ஏலம் எடுக்க வாய்ப்புகள் உள்ளது, என்கிறார்கள்.

Story first published: Tuesday, November 10, 2020, 12:25 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+