Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கஷ்டப்பட்டு ஆடினாரே.. இளம் மேட்ச் வின்னருக்கு இப்படி ஒரு நிலைமையா? பிசிசிஐ ஏன் இப்படி சொல்கிறது!

துபாய்: இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்பலாம் என்று திட்டமிட்டு வந்த இளம் வீரர் ஒருவருக்கு பிசிசிஐ அமைப்பு செக் வைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கும் இந்திய அணிக்கான அறிவிப்பு சில வாரங்கங்களுக்கு முன் வெளியானது. ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான அறிவிப்பு வெளியானது.

இதில் நேற்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டது. பல வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு தேர்வான விர்த்திமன் சாஹா ஆடுவது சந்தேகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இவர் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ரிஷாப் பண்ட் மாற்று விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டு இருந்தார். ராகுல் டெஸ்ட் அணியில் இருந்தாலும் விக்கெட் கீப்பர் கிடையாது.

விக்கெட் கீப்பர்

விக்கெட் கீப்பர்

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த விர்த்திமன் சாஹா ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடி வந்தார். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த இவர்.. மூன்று போட்டியில் அணியின் வெற்றிக்கு உதவினார். அந்த தொடரில் ஹைதராபாத் அணியின் இளம் மேட்ச் வின்னராக விர்த்திமன் சாஹா இருந்தார். நான் டெஸ்ட் வீரர் மட்டுமல்ல.. டி20 போட்டியிலும் நன்றாக ஆடுவேன் என்று நிரூபித்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டது. தொடையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடரில் மீதம் இருந்த போட்டிகளில் ஆட முடியவில்லை. செமி பைனல் போட்டியிலும் இவரால் ஆட முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணியிலும் இவர் ஆடுவது சந்தேகம் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். விர்த்திமன் சாஹாவிற்கு காயம் 2வது கிரேட் என்றால் வாய்ப்பு அளிக்கலாம், கிரேட் 3 என்றால் வாய்ப்பு அளிக்கப்படாது என்று பிசிசிஐ அமைப்பு கூறியுள்ளது.

பரிதாபம்

பரிதாபம்

இதனால் இவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள். தோனி இல்லாத நேரத்தில் அவரின் இடத்தை நிரப்பலாம் என்று விர்த்திமன் சாஹா நினைத்தார். ஆனால் தற்போது காயம் காரணமாக அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, November 10, 2020, 10:26 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+