For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடும் போட்டி.. ப்ளே ஆஃப்-க்குள் நுழைய.. ஒவ்வொரு அணியும் என்ன செய்ய வேண்டும்

ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடும் போட்டி.. ப்ளே ஆஃப்-க்குள் நுழைய.. ஒவ்வொரு அணியும் என்ன செய்ய வேண்டும்

அமீரகம்: புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடிப்பதற்காக 4 அணிகள் கடுமையாக போட்டிபோட்டு வருகின்றன.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கான அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதுவரை புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த சிஎஸ்கே மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ப்ளே ஆஃப்-க்கு முன்னேறிவிட்டது.

ஆர்சிபி

ஆர்சிபி

புள்ளிப்பட்டியலில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி 3வது இடத்தை பிடித்துள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 7 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் 3வது இடத்தில் உள்ளது. எனவே இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த அணி ப்ளே ஆஃப்-க்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

 4வது இடத்திற்கு போட்டி

4வது இடத்திற்கு போட்டி

ஆனால் 4வது இடத்திற்குதான் 4 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும் 7 தோல்விகளை பெற்றுள்ளது. ஆனால் ரன் ரேட் அடிப்படையில் 4 அணிகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

Recommended Video

Rajasthan Team-க்கு எதிரான தோல்விக்கு இதான் காரணம் - Dhoni கொடுத்த விளக்கம்
4 அணிகள் தேவை

4 அணிகள் தேவை

4 அணிகளுமே அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆனால் அதிலும் ரன் ரேட் என்பது முக்கிய பங்கி வகிக்கிறது. அப்படி ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்கலாம்.

* கொல்கத்தா அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மற்ற 3 அணிகளை விட அதிக ரன் ரேட்டும் இருப்பதால் சுலபமாக ப்ளே ஆஃப் செல்லும்.

* ராஜஸ்தான அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். ஆனால் ராஜஸ்தானை விட அதிக ரன் ரேட் உள்ள கொல்கத்தா அணி ஏதாவது ஒரு போட்டியில் தோல்வியடைந்திருக்க வேண்டும்.

* மும்பை அணி அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் மற்ற 3 அணிகளும் அடுத்த 2 போட்டிகளில் ஏதாவது ஒன்றில் தோல்வியடைய வேண்டும்.

* பஞ்சாப் கிங்ஸ் அணியும் அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். அதே போல மற்ற 3 அணிகளும் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்.

 பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

இந்த 4 அணிகளிலும் கொல்கத்தா, மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளுமே கம்பேக் கொடுத்து வருகிறது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அவ்வப்போது சொதப்பி வருவதால் ப்ளே ஆஃப்-க்கு நுழையுமா என்ற கேள்வி சுற்றி வருகிறது. எனவே இந்த வருடத்திற்கான ப்ளே ஆஃப் போட்டிகள் கடுமையானதாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் கருதுகின்றனர்.

Story first published: Sunday, October 3, 2021, 13:31 [IST]
Other articles published on Oct 3, 2021
English summary
4 teams Fighting each other for one place, Mumbai Indians may missing out on IPL playoffs in 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+