Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“6 போட்டிகள்.. 4 அணிகள்.. ஒரே இடம்” என்ன நடந்தால் ஒவ்வொரு அணியும் ப்ளே ஆஃப் செல்லும்.. முழு விவரம்

அமீரகம்: ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய மீதம் முள்ள 4 அணிகளும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 2வது பகுதி ஆட்டங்கள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

4 அணிகளின் போட்டி

4 அணிகளின் போட்டி

மீதமுள்ள 4வது இடத்திற்கான போட்டி தான் நீண்டுக் கொண்டே போகிறது. ஒரு இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என 4 அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. இதில் கொல்கத்தா அணி தற்போதைக்கு 12 புள்ளிகளுடனும், அதிக ரன் ரேட்டுடனும் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் 4 அணிகளுமே இன்னும் ப்ளே ஆஃப் ரேஸில் தான் உள்ளது. அதற்காக அந்த அணிகள் என்ன செய்தால் ப்ளே ஆஃப் செல்லும் என்பதை பார்க்கலாம்.

கேகேஆர்.

கேகேஆர்.

கொல்கத்தா அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுவிட்டது. எனவே அந்த அணிக்கு கடைசியாக போட்டியாக உள்ள ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியை மட்டும் வென்றுவிட்டால் போதும். வெற்றி புள்ளிகள் மற்றும் அதிக ரன் ரேட்டுடன் சுலபமாக ப்ளே ஆஃப்-க்கு சென்றுவிடும். ஒருவேளை ராஜாஸ்தான் அணியிடம் கொல்கத்தா அணி தோல்வியடைந்துவிட்டால், மும்பை அணியால் மட்டுமே கொல்கத்தாவை காப்பாற்ற முடியும்.

அதாவது மும்பை அணிக்கு அடுத்ததாக 2 போட்டிகள் உள்ளன. ராஜஸ்தானுடனான போட்டியில் அந்த அணி வெற்றி பெற வேண்டும். பின்னர் ஐதராபாத் அணியுடன் தோற்க வேண்டும். இப்படி ஒருவேளை நடைபெற்றால் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணியின் ஒட்டுமொத்த புள்ளி 12 ஆக மாறும். பஞ்சாப் அணியும் 12 புள்ளிகள் தான் பெற்றுள்ளது. அப்போது கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்-க்குள் சென்றுவிடும்.

பஞ்சாபின் நிலை

பஞ்சாபின் நிலை

பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிலைமை மிக ஆபத்தாக உள்ளது. அதாவது அந்த அணி 13 போட்டிகளில் ஆடி 10 புள்ளிகளே பெற்றுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் மட்டும் தான் 5வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியாக சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும். அதுவும் பெரிய வெற்றி பெற்று அதிக ரன் ரேட் பெற வேண்டும். அப்படி பெற்றால் 12 புள்ளிகளையே பெற முடியும். மேலும் கொல்கத்தா அணியை விட அதிக ரன் ரேட் இருக்கும். இதன் பின்னர் மற்ற அணிகளின் போட்டி முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும்.

அதாவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மும்பையிடம் தோற்க வேண்டும். பின்னர் கொல்கத்தா அணியிடம் வெற்றி பெற வேண்டும், இதன் பிறகு மும்பை அணி ஐதராபாத் அணியுடனான போட்டியில் தோற்க வேண்டும். இப்படி நடந்தால், அனைத்து அணிகளும் 12 புள்ளிகளுடன் தொடரை முடிக்கும். அப்போது அதிக ரன் ரேட்டுடன் இருக்கும் பஞ்சாப் அணி சுலபமாக ப்ளே ஆஃப் செல்லும்.

ராஜஸ்தானுக்கான வாய்ப்பு

ராஜஸ்தானுக்கான வாய்ப்பு

ராஜஸ்தான் அணிக்கு அடுத்ததாக மும்பை மற்றும் கொல்கத்தா அணியுடன் மோதல் என 2 போட்டிகள் உள்ளது. இந்த இரண்டிலுமே ராஜஸ்தான் அமோக வெற்றி பெற வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் 14 புள்ளிகளுடன் அதிக ரன்ரேட்டும் கிடைக்கும். இதனால் சுலபமாக ப்ளே ஆஃப்-க்கு முன்னேறலாம். ஒருவேளை இன்று மும்பைக்கு எதிராக தோல்வியடைந்தால், கொல்கத்தா அணியை குறைந்தது 75 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் செல்லும்.

மும்பை செய்ய வேண்டியவை

மும்பை செய்ய வேண்டியவை

மும்பை அணிதான் இருப்பதிலேயே மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த அணிக்கு அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் என 2 போட்டிகள் உள்ளது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் செல்வது கடினமான விஷயமாக உள்ளது. ஏனென்றால் மும்பை அணியின் ரன் ரேட் - 0.453 என மிக குறைவாக உள்ளது. எனவே அடுத்துள்ள இரண்டு போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால் கொல்கத்தா அணியை ராஜஸ்தான் வீழ்த்த வேண்டும். அப்படி நடந்தால் மும்பை அணி 14 புள்ளிகளுடனும், மற்ற அணிகள் 12 புள்ளிகளுடன் இருக்கும். இதனால் மும்பை சுலபமாக ப்ளே ஆஃப் செல்லும்.

Story first published: Tuesday, October 5, 2021, 17:38 [IST]
Other articles published on Oct 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+