Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆப்பு.. சொந்த நாட்டு அரசே கைவிட்டது.. இனி இந்தியாவில் தான் தஞ்சமா?

மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பும் விஷயத்தில் அந்நாட்டு அரசு கையை விரித்துவிட்டது.

Recommended Video

IPL வீரர்களின் பாதுகாப்பு எவ்வளவு காலம் தொடரும்? Andrew Tye கேள்வி

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து அயல்நாட்டு வீரர்கள் வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் இருக்க மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்டசன் ஆகியோர் ஏற்கனெவே வெளியேறிவிட்டனர். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இவர்கள் வெளியேறி வருகிறார்கள்.

கிறிஸ் லின் கோரிக்கை

கிறிஸ் லின் கோரிக்கை

இதனிடையெ ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்து செல்ல மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்திருந்தார். ஒவ்வொரு வீரரின் ஐபிஎல் ஒப்பந்த தொகையில் 10% ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு செல்கிறது எனவே அதனை தனி விமானத்தை ஏற்பாடு செய்ய செலவழிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

விமானம் ரத்து

விமானம் ரத்து

இந்நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகள் விமானம் மே 15ம் தேதி வரை தடை செய்யப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இதுகுறித்து பேசிய அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சுற்றுப்பயணத்திற்காக ஒன்றும் வீரர்கள் செல்லவில்லை. தனிப்பட்ட முறையில் தங்கள் சொந்த செலவுகளில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ளனர். எனவே அவர்கள் தங்களது சொந்த செலவில் அங்கு இருந்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தடைவார்கள். அவர்களுக்கு அப்படி ஒன்றும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்பது போல் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

வீரர்களின் நிலைமை

வீரர்களின் நிலைமை

கடந்த ஏப்.9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் இதுவரை 21 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. வரும் மே.30ம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் என சுமார் 30 பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதில் 3 வீரர்கள் ஏற்கனவே கிளம்பிவிட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தான் சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, April 27, 2021, 17:54 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+