இருக்கா? இல்லையா? ஆஸ்திரேலிய வீரர்கள் விவகாரத்தில் நீடிக்கும் குழப்பம்.. வெளியான புதிய தகவல்!
மும்பை: ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்பும் விஷயத்தில் அந்நாட்டு வீரர்களுக்கான சங்கம் பகிர் தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து அயல்நாட்டு வீரர்கள் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினருடன் இருக்க மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

கொரோனா அச்சம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதனிடையெ ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்து செல்ல மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் கிறிஸ் லின் கோரிக்கை விடுத்திருந்தார்.

கைவிரித்த அரசு
இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகள் விமானம் மே 15ம் தேதி வரை தடை செய்யப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை கூட இல்லை
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் சங்கத்தின் தலைவர், டாட் க்ரீன் பெர்க், வீரர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு வீரர்களை அழைத்து வருவது அணி உரிமையாளர்களிடம் பேசி வருகிறோம். ஆனால் அதனை ஏற்பாடு செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆஸ்திரேலிய விளையாட்டு துறை அமைச்சர், தனி விமானத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என கூறிவிட்டார் எனத்தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ உறுதி
இந்தியாவில் தற்போது இருக்கும் கொரோனா சூழலே, வீரர்களுக்கான விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் உள்ள சிக்கலாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஐபிஎல் தொடரில் முடிந்த பிறகு அயல்நாட்டு வீரர்களை அவர்களது வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என பிசிசிஐ உத்தரவாதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications