Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2021 ஐபிஎல்.. போட்டி நடக்கும் இடங்களை இறுதி செய்த பிசிசிஐ.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம குட்நியூஸ்!

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் நடக்க இருக்கும் இடங்களை இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது

2021 ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை ஒவ்வொரு அணியும் உருவாக்கி உள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளது. இந்த முறை இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடர் நடக்க இருக்கும் இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. முதலில் இந்த 2021 ஐபிஎல் தொடர் மும்பை, புனே, அகமதாபாத் மைதானங்களில் மட்டும் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இதில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

எங்கு?

எங்கு?

அதன்படி மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் , டெல்லி, பெங்களூர் ஆகிய மைதானங்களில் இந்த முறை ஐபிஎல் நடக்க உள்ளது. சிஎஸ்கே , கேகேஆர் உள்ளிட்ட அணிகள் வைத்த கோரிக்கை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்.

மும்பை

மும்பை

இந்த முறை மும்பையில் ஐபிஎல் நடப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முக்கியமாக புனே, மும்பையில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால் அங்கு ஆட்டங்கள் நடப்பது சந்தேகம் என்று கூறப்பட்டது.

அழுத்தம்

அழுத்தம்

ஆனால் மும்பை அணி கொடுத்த அழுத்தம் காரணமாக இங்கு ஆட்டங்கள் நடப்பது உறுதியாகி உள்ளது. அதே சமயம் மும்பையில் நடக்கும் போட்டியில் மட்டும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மும்பை மைதானத்தில் நடக்கும் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் வெறும் மைதானத்தில் நடக்கும்.

Story first published: Sunday, February 28, 2021, 15:48 [IST]
Other articles published on Feb 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+