காதல் பண்ண விடுங்கப்பா.. புதுமாப்பிளனுகூட பாக்கல.. பும்ராவை பங்கம் செய்த நீஷம்.. வைரலாகும் பதிவு!
மும்பை: ஜஸ்பிரித் பும்ரா தனது மனைவிக்காக செய்த ஒரு விஷயத்தை நெட்டிசன்களுக்கு தெரியும்படி கலாய்த்துள்ளார் நியுசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம்.
இங்கிலாந்து தொடரின் போது திடீரென விலகிய ஜஸ்பிரித் பும்ரா தனக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக அறிவித்தார்.
பும்ராவுக்கும் - தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கடந்த மார்ச் 15ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

பபுளில் பும்ரா
புதுமாப்பிள்ளையான ஜஸ்பிரித் பும்ரா, ஐபிஎல் தொடரில் பங்கேற்று மும்பை அணிக்காக பிசியாக விளையாடி வந்தார். கொரோனா காரணமாக அவர் அணியின் பயோ பபுளில் இருந்த நேரத்தில் சஞ்சனா கணேஷனுக்கு பிறந்தநாள் வந்தது. ஆனால் அவரால் நேரில் செல்ல முடியவில்லை. இதனால் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

மனைவிக்கு வாழ்த்து
இதற்காக தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பும்ரா, 'ஒவ்வொரு நாளும் என் இதயத்தை திருடிச்செல்லும் நபர் நீதான். எனக்கு சொந்தமானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலானது.

நீஷமின் குசும்பு
பும்ரா தனது மனைவிக்காக போட்ட இந்த பதிவை கண்ட மும்பை வீரர் ஜிம்மி நீஷம், 'நீங்கள் ட்ரெண்ட் போல்ட் குறித்துதான் பதிவிட்டீர்கள் என நினைத்தேன்' எனக் கிண்டல் அடித்துள்ளார். ஏனென்றால் ட்ரண்ட் போல்ட்-ம், பும்ராவும் மும்பை அணியின் தூண்களாக உள்ளனர். கடந்தாண்டு அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் இவர்களும் இருந்தனர். இருவரும் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

சொதப்பிய பும்ரா
ஐபிஎல் தொடரில் முக்கிய நட்சத்திரமாக விளங்கும் ஜஸ்பிரித் பும்ரா இந்தாண்டு பெரியளவில் சோபிக்கவில்லை. இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் ஆடிய அவர் 6 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக டெப்த் ஓவர்களில் கில்லாடியான இவர் இந்த சீசனில் சொதப்பினார்.


Click it and Unblock the Notifications