Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியா இப்படி செஞ்சிட்டாரு.. முதல் ஓவரிலேயே பதற்றம்.. ஆச்சரியத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!

டெல்லி: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே தோனி பதற்றத்துடன் காணப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் ஐதராபாத் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

 தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ - டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கினர். சென்னை அணியில் தீபக் சஹால் வழக்கம் போல் முதல் ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் பந்தை வார்னர் சிங்கிளுக்கு விரட்டிய நிலையில் 2வது பந்தில் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 பேர்ஸ்டோ கேட்ச்

பேர்ஸ்டோ கேட்ச்

அவர் வீசிய 2வது பந்து பேர்ஸ்டோ அடித்த பந்தை தோனி கேட்ச் பிடிக்க தவறவிட்டார். அவுட் ஸ்விங்கராக போடப்பட்ட அந்த பந்தை பேர்ஸ்டோ பின் திசையில் அடிக்க முயன்றபோது இன்சைட் எஜ்ஜானது. ஆனால் சிறிது டைவ் அடித்தும் தோனி அந்த கேட்சை தவறவிட்டார்.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

தூரமாக செல்லும் பந்தை கூட சூப்பர் மேன் போல டைவ் அடித்து பிடிக்கும் தோனி, சுலபமாக வந்த பந்தை கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக 3வது பந்தும் அதே போல போடப்பட்டது. இந்த முறை ஸ்லிப்பில் சுரேஷ் ரெய்னா நிற்கவைக்கப்பட்டார். இந்த பந்தை பேட்ஸ்மேன் தொடாததால் நேராக ரெய்னாவிடம் சென்றது. ஆனால் தோனியும் குழப்பத்தில் தானே பிடிக்க சென்றதால் குழப்பம் ஏற்பட்டது.

தோனி பதற்றம்

தோனி பதற்றம்

கேட்சை தவறவிட்டதில் இருந்து களத்தில் தோனி சிறிது பதற்றமாகவே காணப்பட்டார். தோனியின் இந்த செயல்பாட்டால் பந்துவீச்சாளர் தீபக் சஹார் ஒரு நிமிடம் நின்று தோனியையும், ரெய்னாவையும் 'எல்லாம் சரியாக தானே உள்ளீர்கள் என்பது போல' உற்று பார்த்துவிட்டு சென்றார். இதனால் தோனிக்கு என்ன ஆனது என இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:32 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+