Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுற்றி நின்று பிரஷர் ஏற்றிய வீரர்கள்.. ரோஹித் இறக்கிய 'டெஸ்ட்' அஸ்திரம்.. கேகேஆர் வீழ்த்தியது எப்படி

சென்னை: நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக வெற்றிபெற வாய்ப்பே இல்லாத போட்டியில் மும்பை அணி வென்றது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் வரலாற்றில்.. தாங்கள் ஒரு சிறந்த அணி என்பதை மும்பை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. எந்த சூழ்நிலையிலும் மும்பை சிறந்த டீம், எங்களை குறைத்து எடை போட்டு விடாதீர்கள் என்பதை ரோஹித் சர்மா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

மும்பை தோற்றுவிட்டது என்று வருந்தி நேற்று ஹாட் ஸ்டாரை க்ளோஸ் செய்தவர்களுக்கு எல்லாம் கண்டிப்பாக ஆட்டத்தின் கிளைமேக்ஸ் அதிர்ச்சியை தந்து இருக்கும். கொஞ்சம் கூட வெற்றிபெற வாய்ப்பே இல்லாத போட்டியில் மும்பை வென்றுள்ளது.

எப்படி

எப்படி

நேற்று முதலில் பேட்டிங் செய்த வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின் கொல்கத்தா அணி களமிறங்கிய போது ராணா அதிரடியாக ஆடினார். எப்போதும் மெதுவாக ஆடும் சுப்மான் கில்லும் நேற்று தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடினார். அதோடு இவர்கள் இருவரும் 66 பந்துகளை பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தனர்.

எத்தனை

எத்தனை

இதில் மொத்தம் 85 ரன்கள் எடுத்தனர். இவர்களின் அதிரடி தொடக்கத்தால் கண்டிப்பாக கொல்கத்தா வெல்லும் என்றுதான் கருதப்பட்டது. கடைசி 24 பந்து வரை வெற்றி கொல்கத்தா வசம்தான் இருந்தது. கடைசி 24 பந்தில் 30 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருந்தது. எளிதாக அந்த அணி வெற்றிபெறும் என்றே கருதப்பட்டது.

ஆனால்

ஆனால்

ஆனால் கடைசி 50 பாலில் மொத்தமாக கொல்கத்தா அணி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் 18வது ஓவரில் 3 ரன், அதற்கு அடுத்தடுத்து கடைசி இரண்டு ஓவர்களில் தலா 4 ரன்கள் மட்டுமே கொல்கத்தா எடுத்து. வெற்றிபெற வேண்டிய போட்டியை.. நீங்களே ஜெயிச்சிக்கோங்க என்று மும்பையிடம் கொல்கத்தா தூக்கி கொடுத்துள்ளது. இதற்கு கொல்கத்தாவின் பேட்டிங் சொதப்பல் மட்டும் காரணம் இல்லை. ரோஹித்தின் கேப்டன்சியும் காரணம்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல்லில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை ரோஹித் நிரூபித்துள்ளார். அதிலும் நேற்று பிட்ச் மாறியதும், அதற்கு ஏற்றபடி முழுக்க முழுக்க ஸ்பின் பவுலர்களை இவர் பயன்படுத்திய விதம் அபாரமாக இருந்தது. முக்கியமாக ராகுல் சாகர், குர்ணால் ஆகியோரை இவர் பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. ரோஹித் பீல்டிங் செட்டப்தான் சிறப்பு.

டெஸ்ட்

டெஸ்ட்

டெஸ்ட் போட்டிகளில் வைப்பது போல வீரர்களை சுற்றி நிற்க வைத்து, ரன் செல்வதை தடுத்து, பிரஷர் ஏற்றி கொல்கத்தா பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்தார். அதிலும் பேட்ஸ்மேன்களை சுற்றி 4 பீல்டர்களை நிற்க வைத்தது எல்லாம் யாருமே எதிர்பார்க்காத மூவ். ராகுல் சாகரின் 4 விக்கெட் திருப்பு முனையாக இருந்தாலும், குர்னால் வீசிய 16வது ஓவரில் 1 ரன் மட்டுமே சென்றது.

அடுத்த ஓவர்

அடுத்த ஓவர்

அவர் வீசிய 18வது ஓவரிலும் 3 ரன் மட்டுமே சென்றது. இதுதான் கொல்கத்தாவிற்கு பிரஷரை அதிகம் ஆக்கியுள்ளது. அடிக்கவே முடியாது, அடித்தாலும் கேட்ச் என்ற நிலைதான் நேற்று இருந்தது. டெத் ஓவர்களில் ரன்களை கசிய விடாமல் ரோஹித் அமைத்த பீல்டிங் செட்டப்தான் இதற்கு முக்கிய காரணம். மும்பையிடம் கேகேஆர் வீழ்ந்த கதையும், இதற்கு ரோஹித் வகுத்த திட்டமும் கண்டிப்பாக கிரிக்கெட் உலகில் பெரிய பாடமாக இருக்கும்!

Story first published: Wednesday, April 14, 2021, 11:54 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+