இப்படியெல்லாமா பந்து போடுவது.. திகைத்து போய் நின்ற வீரர்கள்.. நெட்டிசன்களிடம் சிக்கிய மும்பை வீரர்!
டெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் நாதன் கொல்டர் நைல் செய்த விஷயம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணி மாற்றம்
இந்த சீசனில் இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. அதற்காக அணியின் முக்கிய வீரராக பார்க்கப்பட்ட இஷான் கிஷானுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நைலை அணிக்குள் சேர்த்தது.

இணையத்தில் விமர்சனங்கள்
மும்பை அணிக்கு இக்கட்டான சூழல்களில் மிகப்பெரும் இன்னிங்ஸ்களை கொடுத்த இஷான் கிஷான் வெளியேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அதே போல இஷான் கிஷான் செய்யாததை கோல்டர் நைல் அப்படி என்ன செய்யப்போகிறார் என அவர் மீது ரசிகர்கள் விமர்சனங்களை கொட்டி வந்தனர். இந்நிலையில் அதற்கு மேலும் தீனி போடும் சம்பவம் ஒன்று ஆட்டத்தில் நடந்துள்ளது.

வேடிக்கை
ஆட்டத்தின் 20வது ஓவரை நாதன் கோல்டருக்கு கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 5வது பந்தை அவுட்சைட் ஆஃப் ஆக வீச முயன்றபோது பந்து பிட்ச்-க்கு வெளியில் பட்டு கீப்பரிடம் சென்றது. வைடு பால் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவ்வளவு வைடு பாலாக பிட்ச்-க்கு வெளியேவா போடுவது என சக வீரர்கள் வேடிக்கையுடன் பார்த்தனர்.
இதன்பின்னர் அந்த பந்திற்கு அம்பயர் நோ பால் சிக்னல் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பவுலர்கள் சொதப்பல்
இந்த போட்டியில் தொடக்கம் முதலே மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். 4 ஓவர்களை வீசிய கோல்டர் நைல் 35 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது.


Click it and Unblock the Notifications