
அன்பு முத்தம்
இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றவுடன் வீரர்கள் உற்சாகமாக பேசி மகிழ்ந்து வந்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் மைதானத்தில் அமர்ந்திருந்த தன் மனைவி தேவிஷா ஷெட்டிக்கு அருகே வந்தார். கொரோனா காரணமாக பார்வையாளர் பகுதிக்கும் மைதானத்துக்கும் இடையே கண்ணாடி மூலம் அடைக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் வெற்றியின் மகிழ்ச்சியில் கண்ணாடியில் முத்தம் கொடுக்க, அவரது மனைவி மறுபுறம் கண்ணாடி மீது தனது கண்ணங்களை வைத்து பெற்றுக்கொண்டார்.

புகைப்படம் வைரல்
தேவிஷா ஷெட்டிக்கு அருகில் இருந்த சாஹீர் கானின் மனைவி சகாரிகா இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் காதலுக்கு எந்த கொரோனாவும் தடையாக இருக்க முடியாது எனக்கூறி வைரலாக்கி வருகின்றனர்.

மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்களுடன் சேர்த்து அவரது குடும்பத்தினரும் பயோ பபுளில் தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. வீரர்கள் ஒவ்வொரு நகரங்களுக்கு மாறும் போதும் அவரது மனைவிகளும் பாதுகாப்பான முறையில் உடன் அழைத்துச்செல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3வது வெற்றி
முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 18.3 ஓவர்களில் 172/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடி குயிண்டன் டிக்காக் 70* ரன்களும், க்ருணால் பாண்டியா 39* ரன்களும் எடுத்தனர். 3வது வீரராக ஆடிய சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 16 ரன்கள் மட்டும் எடுத்து அவுட்டானார். எனினும்


Click it and Unblock the Notifications