Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் ப்ளேயிங் 11... தோனியின் வழக்கமான ஃபார்முளா.. புதிய ஸ்கெட்ச் உடன் மும்பை அணி

டெல்லி: சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.

பரம எதிரிகளாக பார்க்கப்படும் இந்த அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான ப்ளேயிங் 11ல் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னை அணியில்

சென்னை அணியில்

சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அனைவரும் பார்மிற்கு வந்துவிட்டனர். பேட்டிங்கில் தொடக்க வீரர் ருத்துராஜ் கெயிக்வாட் திணறிவந்த நிலையில் அவரும் ஃபார்முக்கு வந்துவிட்டார். பவுலிங்கில் ஷரத்துல் தாக்கூர் தவிர மற்ற எல்லோரும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள். இதனால் இன்று ஆடும் சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ருத்ராஜ் கெயிக்வாட், டுப்பிளசிஸ், மொயின் அலி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேப்டன் தோனி, ஜடேஜா, சாம் கரன், ஷரத்துல் தாக்கூர், சாகர், லுங்கி நிகிடி

 மும்பை அணி

மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் சற்று திணறி வருகிறது. இதனால் இந்த போட்டியில் கிறிஸ் லின் ஓப்பனிங்கிலும் ரோகித் சர்மா 3வது வீரராகவும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. பவுலிங்கில் 2 மாற்றங்களை செய்துள்ளது. ஜெயந்த் யாதவுக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷமும், கோல்டர் நைலுக்கு பதிலாக தவால் குல்கர்ணியும் களமிறங்குகின்றனர். இதில் ஜேம்ஸ் நீஷம் மும்பை அணிக்காக தனது முதல் போட்டியில் களம் காணுகிறார்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

குயிண்டன் டிகாக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷம், ராகுல் சஹார், தவால் குல்கர்ணி, ஜஸ்ப்ரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

Story first published: Saturday, May 1, 2021, 19:51 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+