சிஎஸ்கேவுக்கு எதிராக ஸ்கெட்ச்... முக்கிய வீரரை களமிறக்கும் மும்பை... ப்ளேயிங் 11 கணிப்பு
டெல்லி: இன்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடவிருக்கும் 11 வீரர்கள் யார்? யார்? என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மும்பை - சென்னை போட்டி இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி ரசிகர்களும் இணையத்தை தெறிக்கவிட ஆரம்பித்துவிட்டனர்.
இந்த சீசனில் சிஎஸ்கே இதுவரை 6 போட்டிகளில் ஆடி 5ல் வெற்றி பெற்று அசுர பலத்தில் உள்ளது. அதே போல மும்பை அணி சற்று திணறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் ஆடி 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணி
சென்னை அணியை பொறுத்தவரை முதல் போட்டியின் தோல்விக்கு பிறகு மிகப்பெரும் கம்பேக் கொடுத்து வருகின்றனர். ஓப்பனிங்கில் ருத்ராஜ் - டுப்ளசிஸ், மிடில் ஆர்டரில் ரெய்னா, ராயுடு மற்றும் லோயர் ஆர்டரில் ஜடேஜா வரை அணி மிக பலமாக உள்ளது. தோனி மட்டும் இன்னும் ஃபார்முக்கு திரும்பவில்லை. பந்துவீச்சிலும் ஷர்துல், தாக்கூர், லுங்கி நெகிடி என பலமாகவே உள்ளது.

மாற்றம்
மும்பை அணி பேட்டிங்கில் சற்று திணறி வருகிறது. குறிப்பாக மிடில் ஆர்டரில் சொதப்பி வருகிறது. இன்று சிஎஸ்கேவுக்கு எதிரான முக்கிய போட்டி என்பதால் பேட்டிங்கை இன்னும் பலப்படுத்த ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின்னை ஓப்பனிங்கிற்கு கொண்டு வர வாய்ப்புள்ளது. கிறிஸ் லின் மற்றும் டிகாக் ஓப்பனிங் இறங்க, ரோகித் சர்மா ஃபார்மில் உள்ளதால் 3வது வீரராக களமிறங்குவார். இந்த சீசனில் முதல் போட்டியில் மட்டும் ஆடிய கிறிஸ் லின் 49 ரன்கள் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சு
பந்துவீச்சை பொறுத்தவரை சிறப்பாகவே பார்க்கப்படுகிறது. க்ருணால் பாண்டியா, ராகுல் சஹார், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் சற்று உதவினாலும், முக்கிய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் பழைய ஃபார்முக்கு திரும்பவில்லை. எனவே இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங்கை அவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளேயிங் லெவன்
கிறிஸ் லின், டிகாக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், ஜஸ்ப்ரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்


Click it and Unblock the Notifications