For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பமே வெற்றிதான்.. நாளைய போட்டியில் வெல்லப்போவது யார்.. வெளியான கணிப்பு.. முழு பின்னணி

சென்னை: இந்தாண்டு ஐபிஎல்- தொடரின் முதல் போட்டியை எந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது கணிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இரு அணிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதற்கு முந்தைய போட்டிகளை வைத்து பார்க்கலாம்.

தோல்வி

தோல்வி

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2012ம் ஆண்டு முதல் ஒரு முறை கூட முதல் போட்டியில் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் அதுவே அவர்களின் வெற்றி முக்கிய தூண்டுகோலாக உள்ளது. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பிறகு அவர்கள் தொடரின் மற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடுகிறார்கள்.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிக முறையாக 17 முறை மும்பை அணியும் விராட் கோலியின் பெங்களூரு அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்தமுறை படி பார்த்தால் மும்பை அணிக்கு சாதகமாக புள்ளி விவரங்கள் உள்ளன.

மைதானம்

மைதானம்

மும்பை - பெங்களூரு அணிகள் இதுவரை தங்களது ஹோம் மைதானங்கள் இன்றி பொது மைதானங்களில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் பெங்களூரு அணி 4 வெற்றிகளும் மும்பை அணி 2 வெற்றிகளும் பெற்றுள்ளன. இந்த 6 போட்டிகள் நடைபெற்ற இடங்களில் சென்னை மைதானமும் ஒன்று. அந்த போட்டியிலும் பெங்களூரு அணியே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்துடன் களமிறங்கவுள்ளது. மறு புறம் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி இந்த முறை தொடக்கம் முதலே வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கவுள்ளது.

Story first published: Thursday, April 8, 2021, 16:25 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
Neutral venue record of MI vs RCB which Clash on first match of the IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X