அவர் தான் கேம் சேஞ்சர்.. சிஎஸ்கே அணியின் சக்சஸுக்கு காரணம்.. புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!
மும்பை: சென்னை அணியின் ஆட்டத்தை மாற்றி அமைக்ககூடிய வீரர் ஒருவரை முன்னாள் வீரர் குறிபிட்டு காட்டியுள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டது. மொத்தமாக 7 போட்டியில் விளையாடிய அந்த அணி 5 ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மொயின் அலி தான் சென்னை அணியின் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர் என முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஆட்டம்
இந்தாண்டு சிஎஸ்கே அணியில் புதிதாக சேர்ந்த மொயின் அலி, 3வது வீரராக களமிறங்கி அசத்தல் ஆட்டத்தை காட்டினார். 7 போட்டிகளில் ஆடிய அவர், 206 ரன்களை எடுத்து அணிக்கு உதவினார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்டரைக் ரேட் 157.25 ஆக இருந்தது தான். அதே போல இந்த தொடரில் முக்கியமான நேரங்களில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

பார்த்தீவ் கருத்து
இதுகுறித்து பேசிய பார்த்தீவ் பட்டேல், மொயின் அலி தான் சிஎஸ்கேவின் கேம் சேஞ்சர் என சொல்வேன். அவர் ஓப்பனிங் இறங்கினாலும் சரி, முதல் விக்கெட்டிற்கு இறங்கினாலும் சரி சிறப்பாக ஆடுவார். தொடக்க வீரர்கள் டுப்ளசிஸ் மற்றும் ருத்ராஜின் அதிரடி ரன் குவிப்பை அப்படியே எடுத்து செல்வார். அவர் இதுபோன்று ஆடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

தோனி கேப்டன்சி
இந்தாண்டு என் மனதில் டாப் 4 இடங்களில் சிஎஸ்கே அணியும் இருந்தது. அணியை தோனி கையாண்ட விதம் மிக அருமையாக இருந்தது. இதுபோன்ற ஒரு தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றால் தோனி போன்ற அனுபவ வீரர் தேவை. குறிப்பாக அவர் அணியில் செய்த மாற்றம் அற்புதமானது.

தோனியின் திறமை
சுரேஷ் ரெய்னா தான் 3வது வீரராக களமிறங்குவார் என அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் மொயின் அலியை களமிறக்கினார் தோனி. அணியில் என்ன மாற்றம் தேவை என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார். தோனி 4 அல்லது 5வது வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சிறப்பாக ஆடும் மற்ற வீரர்களுக்கு வாய்பளித்து ரன்களை உயர்த்தினார். அவரின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது.


Click it and Unblock the Notifications