Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னர் செஞ்ச தப்பு இதுதான். அவருக்கு கொஞ்சம் கூட அது இல்ல.. சுட்டிக்காட்டி விளாசும் சேவாக்!

டெல்லி: சிஎஸ்கேவுக்கு எதிராக ஐதராபாத் அணி, அந்த அணியின் கேப்டன் வார்னரை முன்னாள் வீரர் சேவாக் விளாசியுள்ளார்.

சென்னை அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி மீண்டு தோல்வியடைந்து ஏமாற்றியது.

இந்த தோல்விக்கு காரணம் தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் அதிக பந்துகளை விரயம் செய்துவிட்டு அதிரடி காட்டாததுதான் என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மோசமான பேட்டிங்

மோசமான பேட்டிங்

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. டெல்லி போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் இருக்கும் பிட்ச்-ல் வெறும் 3 விக்கெட்களை மட்டுமே இழந்த போதும் அந்த அணி குறைவான ஸ்கோரே அடித்தது. இதற்கு காரணம் டேவிட் வார்னர் நிறைய பந்துகளை விரயம் ஆக்கியது 55 பந்துகள் பிடித்த வார்னர் வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே பின்னர் ஆடிய சென்னை அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

பேட்டிங் பிட்ச்-தான்

பேட்டிங் பிட்ச்-தான்

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ஐதராபாத் அணியின் வார்னர் - மணிஷ் பாண்டே பெரிய பார்ட்னர்ஷிப் கொடுத்து 171 ரன்கள் குவித்தனர். சென்னை போன்ற ஆடுகளத்தில் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் டெல்லி பேட்டிங்கிற்கு மிகவும் உதவக்கூடிய பிட்ச் ஆகும். ஆட்டத்தின் கடைசியில் விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு பேட்டிங் செய்ய எந்த சிரமமும் இல்லாத போது ஓப்பனர்கள் ஏன் அதிரடி காட்டவில்லை.

 விமர்சனம்

விமர்சனம்

டேவிட் வார்னரின் எண்ணவோட்டம் மிகவும் மோசமாக இருந்தது. அவரின் ஆட்ட முறையே சரியில்லை. அவர் எந்தவித பதற்றமும் இன்றி ஆடியிருக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்றாக உள்ளது. பந்தானது நன்றாக பேட்டிற்கு வந்தது. மணிஷ் பாண்டே 36 பந்துகளில் அரைசதம் அடிக்க முயன்றால், வார்னர் அதிகப்படியான ரன்களை குவித்திருக்க வேண்டும். அவருக்கு பின்னால் வில்லியம்சன், கேதர் ஜாதவ், விஜய் சங்கர் உள்ளனர் என்பது அவருக்கு தெரியும். எனவே ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும்.

 வில்லியம்சன்

வில்லியம்சன்

கேப்டனாக டேவிட் வார்னருக்கு நான் அதிக ரேட்டிங் கொடுக்க மாட்டேன். சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டிங்கை உடைக்க சில விஷயங்களை வார்னர் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. இதுவே வில்லியம்சன் கேப்டனாக இருந்திருந்தால் வேறு ஆட்டத்தை பார்த்திருக்கலாம். ஏனென்றால் விக்கெட் எடுத்தால் தான் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்பது அவருக்கு தெரியும் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 29, 2021, 18:13 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+