For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷாருக்கானின் ஒற்றை ட்வீட்.. கொல்கத்தா அணி மீதான விமர்சனங்களுக்கு முடிவு.. வாயடைத்த நெட்டிசன்கள்!

வெற்றிக்கு மிக அருகில் வந்த போதும், வெற்றிக்கான வாய்ப்பு பெரிய அளவில் இருந்த போதும் அந்த அணி தோற்றது நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சென்னை: கொல்கத்தா அணியின் படுமோசமான தோல்வி குறித்து அந்த அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் வாய்த்திறந்துள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வெற்றிக்கு மிக அருகில் வந்த போதும், வெற்றிக்கான வாய்ப்பு பெரிய அளவில் இருந்த போதும் அந்த அணி தோற்றது நெட்டசன்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 இலக்கு

இலக்கு

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, எதிரணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினர். மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் (56), ரோஹித் ஷர்மா (43) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியேறியதால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்கள் எடுத்தது.

 விமர்சனம்

விமர்சனம்

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. நிதிஷ் ராணா 57 ரன்களும், சுப்மன் கில் 33 ரன்களும் எடுத்தனர். எனினும் அதன் பிறகு வந்தவர்கள் மோசமான முறையில் வெளியேறினர். 122 ரன்களுக்கு 3 விக்கெட் இருந்த நிலையில் 140 ரன்களுக்குள் 7 விக்கெட்களை இழந்து இலக்கை எட்ட முடியாமல் இருந்தது. கையில் மீதம் 3 விக்கெட்கள் இருந்தபோதும் அந்த அணி வீரர்கள் அதிரடி காட்டவில்லை. இதனால் கொல்கத்தா அணி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வருத்தம்

வருத்தம்

இந்நிலையில் இதுகுறித்து கொல்கத்தா அணி சார்பாக அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது ட்வீட்டில் கொல்கத்தா அணியின் செயல்பாடு ஏமாற்றத்தை அளித்தது. ரசிகர்கள் அனைவருக்கு அணியின் சார்பாக மன்னிப்பு கோருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இவரின் உருக்கமான ட்வீட் வைரலாகி வருகிறது. அவரது பதிவை போட்டவுடன் 10 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்தனர். தற்போது வரை 83 ஆயிரம் ரீ ட்வீட் செய்துள்ளனர்.

 தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

நெட்டிசன்கள் குறிப்பாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸ்ஸல் ஆகியோரையே தாக்கி வருகின்றனர். அந்த அணி வெற்றிபெற கடைசி 28 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. களத்தில் தினேஷ் கார்த்திக் (8*), ஆண்ட்ரே ரஸ்ஸல்(9) இருவரும் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக 18வது ஓவரில் க்ருணால் பாண்டியா ஓவரில் வெறும் 3 ரன்களே அடித்தனர். இதெல்லாம் மோசமான தோல்விக்கு வழிவகுத்தது.

Story first published: Wednesday, April 14, 2021, 11:45 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Shah Rukh Khan apology for fans after KKR collapse!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+