Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு போட்டியில் கூட ஆடாமல்.. ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய சச்சின் மகன்.. என்ன காரணம் தெரியுமா

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்குப் பதிலாக சிமர்ஜீத் சிங் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் முதலில் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அங்கு சில வாரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற நிலையில் கொரோனா காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டது

இதனிடையே சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு ஐக்கிய அமீரகத்தில் இப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் ஒவ்வொரு போட்டிகளிலும் அனல் பறக்கிறது..

அர்ஜுன் டெண்டுல்கர்

அர்ஜுன் டெண்டுல்கர்

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இடம் பெற்றிருந்தார். இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் முதல்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்ததாதல், அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், காயம் காரணமாக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்குப் பதில் மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிமர்ஜீத் சிங்

சிமர்ஜீத் சிங்

இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காயம் ஏற்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து அர்ஜுன் டெண்டுல்கர் விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக சிமர்ஜீத் சிங் அணியில் சேர்க்கப்படுகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் வழிகாட்டுதல்களின்படி கட்டாய தனிமைப்படுத்தும் காலத்திற்குப் பின்னர், மும்பை அணியுடன் பயிற்சியைத் தொடங்குவார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிமர்ஜீத் சிங்

சிமர்ஜீத் சிங்

டெல்லியை சேர்ந்த 23 வயதான சிமர்ஜீத் சிங் ஐபிஎல் தொடரில் ஆடுவது இதுவே முதல்முறையாகும். அவர் 2018ஆம் ஆண்டு டெல்லி அணி சார்பில் லிஸ்ட் A போட்டியில் முதல்முதலில் அறிமுகமானவர் சிமர்ஜீத் சிங். அதே ஆண்டில் முதல்தர போட்டிகளிலும் அறிமுகமான சிமர்ஜீத் சிங், இதுவரை 10 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல 19 லிஸ்ட் A போட்டிகளிலும் 15 T20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். சிமர்ஜீத் சிங் முறையாக முதல்தர போட்டிகளில் 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல அவர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 19 விக்கெட்களையும் டி20 போட்டிகளில் 18 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில்

சர்வதேச போட்டிகளில்

சிமர்ஜீத் சிங் இந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு இந்திய அணியின் ஒரு நாள் சுற்றுப்பயணத்தில் ஐந்து நெட் பவுலர்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது க்ருனால் பாண்டியாவுக்கும் சப்போர்ட் ஸ்டாப்கள் 8 பேருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடைசி இரண்டு டி 20களில் சிமர்ஜீத் சிங் களமிறங்கினார்.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றி மற்றும் 6 போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளி பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தனது அடுத்த போட்டியில் டெல்லி அணியை வரும் அக்டோபர் 2ஆம் தேதி எதிர்கொள்கிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது.

Story first published: Wednesday, September 29, 2021, 23:27 [IST]
Other articles published on Sep 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+