Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேர ஒப்பந்தத்தில் ஜாக்பாட்.. வெஸ்ட் இண்டீஸின் அதிரடி நாயகன்.. தட்டித்தூக்கிய ஐதராபாத் அணி!

சென்னை: ஜானி பேர்ஸ்டோவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

Recommended Video

IND vs ENG 5th Test: 2 Chances to Decide Match Winner | OneIndia Tami

14வது ஐபிஎல் தொடரின் 2ம் பகுதி ஆட்டங்கள் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளன.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

ஆனால் அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன், கிறிஸ் வோக்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கபோவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை வரை அமீரகத்திற்கு வருவதாக கூறிவந்த இவர்கள், சனிக்கிழமையன்று திடீரென வரப்போவதில்லை என தெரிவித்துவிட்டனர். இதனால் மாற்று வீரர்களை தேடும் பணிகளில் அணிகள் ஈடுப்பட்டு வருகின்றன.

என்ன காரணம்

என்ன காரணம்

சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிசியோ ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், 5ஆவது போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் கொரோனா விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாமல், ஊர்சுற்றியதால்தான் கொரோனா பரவியது என இங்கிலாந்து வீரர்கள் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தது.

இங்கிலாந்து வீரர்கள் விலகல்

இங்கிலாந்து வீரர்கள் விலகல்

இதற்காக தங்களில் அதிருப்தியை வெளிப்படுத்த பேர்ஸ்டோ, மலான், வோக்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இந்த செய்திகளை அந்த வீரர்களும் உறுதிப்படுத்தினர். பேர்ஸ்டோ ஹைதராபாத் அணிக்காகவும், மாலன் பஞ்சாப் அணிக்காகவும், வோக்ஸ் டெல்லி அணிக்காகவும் ஒப்பந்தமாகியிருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்

இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக மேற்கிந்தியத் தீவுகள் அணியை சேர்ந்த வீரர் ஷெர்பேன் ரூதர்போர்ட்டை சன் ரைசர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போதைய சூழலை பொறுத்தவரை ஜானி பேர்ஸ்டோவை விட ஷெர்பேன் நல்ல ஃபார்மில் இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடியாக விளையாடி வருகிறார். இதனால், ஐபிஎல் 14ஆவது சீசனிலும் அதிரடி காட்டுவார் எனக் கருதப்படுகிறது. அதேபோல் பஞ்சாப் அணிக்கு மாலனுக்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் எய்டன் மார்க்கரம் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, September 12, 2021, 21:37 [IST]
Other articles published on Sep 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+