Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேகமாக ஓடி வந்த ரோஹித்.. கால் பிசகி.. என்னா அடி.. ஏன் இப்படி பண்ணுனாரு? அப்படி என்ன கட்டாயம்?

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று திடீரென ஸ்பின் பவுலிங் செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாள் போட்டியும் பல திருப்பங்களுடன், கடைசி நொடி வரை யார் வெற்றிபெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டும் எடுத்தது.

கொல்கத்தா

கொல்கத்தா

நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று 14வது ஓவரை வீச வந்த ரோஹித் சர்மா முதல் பால் போடும் முன்பே தவறி விழுந்தார். கால் பிசகி தடுக்கி விழுந்தார்.

வலி

வலி

இதில் வலியில் துடித்த ரோஹித் சர்மா பின் சில நிமிட ஓய்விற்கு பின், சோதனைக்கு பின் மீண்டும் பவுலிங் செய்தார். இந்த ஓவரில் ரோஹித் 9 ரன்கள் கொடுத்தார். மும்பை அணி நேற்று 15 ஓவர்கள் வரை தோல்வி அடையும் நிலையிலேயே இருந்தது. ஒரு பக்கம் ஸ்பின் பவுலர் ராகுல் சாகர் மட்டுமே நன்றாக பவுலிங் செய்தார்.

ஸ்பின்

ஸ்பின்

அதன்பின் இன்னொரு ஸ்பின் பவுலர் குர்னால் பாண்டியா நன்றாக பவுலிங் செய்தார். நேற்று பிட்ச் பாஸ்ட் பவுலிங்கை விட ஸ்பின் பவுலிங்கிற்கே அதிக ஒத்துழைப்பு கொடுத்தது. ஆனால் மும்பை அணியில் வேறு ஸ்பின் பவுலர்கள் இல்லை.

காரணம்

காரணம்

இதன் காரணமாகவே நேற்று ரோஹித் சர்மா பவுலிங் செய்தார். பாண்டியாவும் பவுலிங் செய்வது இல்லை என்பதாலும், ஸ்பின் பவுலர் வேண்டும் என்பதாலும் ரோஹித் இப்படி செய்தார். ஸ்பின் நன்றாக வேலை செய்கிறது, ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தால் இப்படி ரோகித் சர்மா காலில் அடிபட்ட பின்பும் கூட நேற்று பவுலிங் செய்தார்.

Story first published: Wednesday, April 14, 2021, 11:47 [IST]
Other articles published on Apr 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+