அம்பயரின் ஒரே ஒரு தவறான தீர்ப்பு.. பரிதாபமாக தோல்வியடைந்த மும்பை அணி.. கொல்கத்தா வென்றது எப்படி??
மும்பை: நடுவரின் ஒரே ஒரு தவறான தீர்ப்பால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி பரிதாபமாக தோற்றது.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 165/9 ரன்களை குவித்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்
கொல்கத்தா அண்யின் ஓப்பனிங்கில் வெங்கடேஷ் ஐயர் 43 ரன்கள், அஜிங்கியா ரகானே 25 ரன்களை ஆகியோர் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா மற்றும் போராட மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பினர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (6), ஆண்ட்ரே ரஸல் (9) ஆகியோர் சொற் ரன்களுக்கு வெளியேறியதால் கொல்கத்தா தடுமாறியது. எனினும் மறுமுணையில் தூண் போன்று நின்ற ராணா 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக நின்ற ரிங்கு சிங் 23 ரன்கள் அடித்தார்.

சர்ச்சை முடிவு
166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரில் சவுத்தி வீசிய ஷார்ட் லெந்த் பந்தை ரோகித் சற்று எகிறி சிங்கிள் அடிக்க முயன்றார். ஆனால் பந்து ஸ்லிப்பிடம் சென்றது. இதனை ரிவ்யூவ் செய்த போது பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது தெரிந்தது. எனினும் அதற்கு அம்பயர் அவுட் கொடுத்தார். இதனால் ரோகித் வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார்.

சரிந்த மிடில் ஆர்டர்
முதல் ஓவரில் வந்த அதிர்ச்சி மும்பை அணியை கடைசி வரை பாதித்தது. திலக் வர்மா (2), ராமந்தீப் சிங் (12), டிம் டேவிட் (12), பொல்லார்ட் (15) என அடுத்தடுத்து வெளியேறினர். இஷான் கிஷான் நிதானமாக ரன் சேர்த்து 43 பந்துகளில் 51 ரன்களை அடித்தார். ஆனால் அவருக்கு யாரிடம் இருந்தும் பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை.
Recommended Video

ப்ளே ஆஃப் நம்பிக்கை
அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேற 17.3 ஓவர்களில் மும்பை அணி 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி ஏற்கனவே தொடரி ல் இருந்து வெளியேறிவிட்டது. எனினும் கொல்கத்தா அண் 5வது வெற்றியை பெற்று இன்னும் ப்ளே ஆஃப் நம்பிக்கையுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications