For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எது அவுட்டா??.. அம்பயரின் தீர்ப்பால் மற்றொரு சர்ச்சை.. அதிர்ச்சியில் ஆழ்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி!

மும்பை: மும்பை அணியின் போட்டியில் ரோகித் சர்மாவின் விக்கெட்டில் மீண்டும் அம்பயரிங் சர்ச்சை வெடித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 165/9 ரன்களை குவித்தது.

கொல்கத்தா இன்னிங்ஸ்

கொல்கத்தா இன்னிங்ஸ்

தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 43 ரன்கள், அஜிங்கியா ரகானே 25 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இதன் பின்னர் வந்த நிதிஷ் ராணா 43 ரன்களும், ரிங்கு சிங் 23 ரன்கள் அடித்தனர். அதிரடி வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் சொற் ரன்களுக்கு வெளியேறியதால் தட்டுத்தடுமாறி 165 ரன்களை சேர்த்தது.

ரோகித் விக்கெட்

ரோகித் விக்கெட்

166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அதுவும் நடுவரால் நடந்தது. முதல் ஓவரில் சவுத்தி வீசிய கடைசி பந்து சற்று ஷார்ட் லெந்த் டெலிவெரியாக போடப்பட்டது. இதனை ரோகித் சர்மா சற்று குதித்து லெக் சைட் அடிக்க முயன்றார். அப்போது அதனை கேட்ச் பிடித்துவிட்டு, எட்ஜானதாக கூறி ஷெல்டன் ஜாக்சன் முறையிட்டார். இதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார்.

அதிர்ச்சியை தந்த முடிவு

அதிர்ச்சியை தந்த முடிவு

இதனை ரீப்ளே செய்து பார்த்த போது, பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது போன்று அல்ட்ரா எட்ஜில் தெரியவந்தது. இதனால் மும்பை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படி 3வது நடுவர் அந்த பந்து பேட்டில் தான் பட்டது எனக்கூறி அவுட் கொடுத்தார்.

Recommended Video

IPL 2022 Mumbai Indians படுதோல்வி ! CSK அணிக்கு பின்னடைவு | Oneindia Tamil
 அதிர்ச்சியில் உறைந்த ரோகித்

அதிர்ச்சியில் உறைந்த ரோகித்

நடுவரின் இந்த முடிவால் ரோகித் சர்மா, டக் அவுட்டில் இருந்த மும்பை அணியினர் ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். நாட் அவுட்டாக இருந்திருக்க வேண்டிய ரோகித் சர்மா வெறும் 2 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் சமூக வலைதளங்களில் அம்பயரிங் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story first published: Monday, May 9, 2022, 23:38 [IST]
Other articles published on May 9, 2022
English summary
Umpire's decision on Rohit sharma's wicket ( ரோகித் சர்மாவுக்கு நடுவர் கொடுத்த தீர்ப்பு ) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நடுவர் கொடுத்த தவறான தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+