Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளுக்கப்பட்ட நடராஜன்.. ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கிரீன் அதிரடி.. மும்பை அணி 192 ரன்கள் குவிப்பு!

ஐதராபாத்: மும்பை அணியால் ரூ.17.5 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீனின் அதிரடியான ஆட்டத்தால், ஐதராபாத் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றதில்லை. இந்த நிலையில் மும்பை அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 IPL 2023: After Cameron Green fifty, Mumbai set a target of 193 Runs for Hyderabad

தொடர்ந்து இஷான் கிஷன் - கேமரூன் கிரீன் கூட்டணி சேர்ந்தது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 53 ரன்கள் எடுத்தது. இதனிடையே ஸ்பின்னர்களின் அட்டாக்கால் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் இஷான் கிஷன் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரியை அடித்தார். அதிரடியாக ஆடுவது போல் பார்க்கப்பட்ட நிலையில், 31 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 38 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மார்கோ யான்சன் வீசிய அதே ஓவரில் மார்க்ரமின் அபாரமான கேட்ச்சால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேமரூன் கிரீன் - திலக் வர்மா இணை சேர்ந்தது. திலக் வர்மா வந்த முதல் பந்து முதலே அதிரடியை தொடங்கினார். இவரின் அதிரடியால் மும்பை அணி 15 ஓவர்கள் முடிவில் 130 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து சிக்சர்களாக விளாசிய திலக் வர்மா 37 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு டிம் டேவிட் - கிரீன் கைகளில் கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப நடராஜன் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து கேமரூன் கிரீன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து 19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 174 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட, மும்பை அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய கேமரூன் கிரீன் 64 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Story first published: Tuesday, April 18, 2023, 21:21 [IST]
Other articles published on Apr 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+