Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”அய்யா பொல்லார்ட் அய்யா நீங்களா” மும்பை ரசிகர்கள் கொண்டாட்டம்.. வெறித்தன மீம்ஸ் இதோ!

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். வழக்கமாக பட்லர் மும்பை அணியை பொளந்து கட்டி வந்த நிலையில், நேற்றையப் போட்டியில் ஜெய்ஸ்வால் தனியாக வெளுத்து வாங்கினார். இதனை ஐயா படத்தில் வரும் வில்லன் பிரகாஷ்ராஜ், சரத்குமார் உருவத்தை பொம்மையாக வைத்து தன் மகனை வெட்ட சொல்லுவார். அதில் பிரகாஷ்ராஜாக பட்லரையும் அவரின் பரம்பரையாக ஜெய்ஸ்வாலாகவும் மாற்றி சரத்குமார் பொம்மையாக மும்பை அணியை வைத்து உருவாக்கப்பட்ட மீம் வெறித்தனம்.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

நேற்றையப் போட்டியில் மும்பை அணியில் 8 எகனாமியில் பந்துவீசி 2 முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் அனைவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். இந்த சீசன் முழுக்கவே இதே சம்பவம் நடந்து வருகிறது. இதனை வானத்தைப் போல படத்தில் வரும் அண்ணன் விஜயகாந்த் தனது தம்பிகள் தூங்குவதற்காக இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து தம்பிகளை மடியில் தூங்க வைப்பார். அதில் அண்ணன் விஜயகாந்தாக பியூஷ் சாவ்லாவையும் அவரின் மடியில் தூங்கும் தம்பிகளாக அர்ஜுன் டெண்டுல்கர், ஆர்ச்சர் மற்றும் கேமரூன் க்ரீனையும் மாற்றி உருவாக்கப்பட்ட மீம் தெறி.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பிறந்தநாளன்று களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 5 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சிவாஜி படத்தில் அனைத்தையும் இழந்து நிற்கும் ரஜினியிடம் விவேக், "நீ பேசாம வெளிநாட்டுக்கே போயிரு சிவாஜி" என்று சொல்லுவார். அதுபோல் ரோகித் சர்மாவை ரசிகர்கள், "நீ பேசாம இண்டர்நேஷனல் மேட்ச் மட்டும் ஆடு சிவாஜி" என்று உருவாக்கப்பட்ட மீம் வேற லெவல்.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

அதேபோல் ரோகித் சர்மா விக்கெட்டை சந்தீப் சர்மா எளிதாக வீழ்த்தினார். இதனை நாடோடிகள் படத்தில் பரணி, "எல்லாத்தையும் என்னைய வச்சே டெஸ்ட் பண்ணுங்கடா" என்று சொல்லுவார். அதனை மாற்றி ரோகித் சர்மா பேசுவது போல், "எல்லா மேட்ச்லயும் என்ன மட்டும் ஈஸியா முதல் விக்கெட்டா எடுக்குறீங்கடா" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் ஜாலி ரகம்.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

நேற்றையப் போட்டியில் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அதில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி டிம் டேவிட் அசத்தினார். இதனால் பலருக்கும் மும்பை அணியின் பொல்லார்ட் நினைவுக்கு வந்தார். குஸ்தி படத்தில் வடிவேலு, "அய்யா சிங்கம் அய்யா நீங்களா" என்று வசனம் பேசுவார். அதனை மாற்றி டிம் டேவிட்டை, "அய்யா பொல்லார்ட் அய்யா நீங்களா" என்று மும்பை ரசிகர்கள் அழைப்பது போல் உருவாக்கப்பட்ட மீம் அசத்தல்.

IPL 2023: Fans created Stunning Memes After Mumbai beat Rajasthan by 6 Wickets

அதேபோல் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்கள் குவித்து மும்பை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதனால் டிம் டேவிட்டை வீரம் படத்தில் அஜித்குமாராக மாற்றி, "என்ன தாண்டி.. தொட்றா பாக்கலாம்" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்ட மீம் தரமான செய்கை.

Story first published: Monday, May 1, 2023, 7:53 [IST]
Other articles published on May 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+