Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்தான்ஸை பொளந்து கட்டிய குஜராத்.. சின்னவர் சிக்சர் மட்டுமே ஆறுதல்.. பாதாளத்தில் வீழ்ந்த மும்பை!

அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. குஜராத் அணி சார்பாக இளம் வீரர் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இதையடுத்து மும்பை அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

IPL 2023: Gujarat titans beats Mumbai Indians by 55 Runs at Ahmedabad

அகமதாபாத் மைதான பிட்ச்சில் உள்ள ஸ்விங்கை பயன்படுத்தும் வகையில் முதல் ஸ்பெல்லை முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா வீசினர். முதல் ஓவரில் ஷமி வீசிய பந்தில் இஷான் கிஷன் மைதானத்திலேயே நடனமாடினார். பின்னர் ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் ரோகித் சர்மா 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பவர் பிளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்திருக்க, கேமரூன் க்ரீன் அதிரடிக்கு மாறினார். ஆனால் இஷான் கிஷன் 21 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த திலக் வர்மா 2 ரன்களில் எடுத்து அதே ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் க்ரீன் - சூர்யகுமார் இணை நிதானமாக ஆடியது. 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 58 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின்னர் அதிரடியாக ஆட முயன்று கேமரூன் க்ரீன் 33 ரன்களிலும், டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமலும் நூர் அஹ்மத் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் பீஸ்ட் மோடுக்கு மாறினார். ரஷித் கான் ஓவரில் சிக்சர்கள் விளாச, பின்னர் நூர் அஹ்மத் ஓவரில் பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 13வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவும் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணியின் வெற்றிக் கனவு முடிவுக்கு வந்தது.

பின்னர் வந்த நேஹல் வதேரா மட்டும் அதிரடியாக சில சிக்சர்களை விளாசினார். ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தொடர்ந்து பியூஷ் சாவ்லா 18 ரன்களிலும், நேஹல் வதேரா 40 ரன்களிலும், அர்ஜுன் டெண்டுல்கர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. குஜராத் அணி சார்பாக நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் மோகித் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Story first published: Tuesday, April 25, 2023, 23:35 [IST]
Other articles published on Apr 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+