Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதி நேரத்தில் புயலாய் மாறிய குஜராத்.. இதுதான் டிவாட்டியா ஸ்பெஷல்.. மும்பைக்கு 208 ரன்கள் இலக்கு!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி 208 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசி 5 ஓவர்களில் குஜராத் அணி பேட்ஸ்மேன்கள் 77 ரன்களை விளாசியுள்ளனர்.

16வது ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி சார்பாக ஆர்ச்சர், ஹிர்த்திக் ஷோக்கின் ஆகியோர் நீக்கப்பட்டு மெரிடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

IPL 2023: Gujarat Titans set a target of 208 runs for Mumbai Indians to Win

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சாஹா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஜுன் டெண்டுல்கர் பந்தில் சாஹா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஹர்திக் பாண்டியா - கில் இணை சேர்ந்தது. 5 ஓவர்கள் வரை சுப்மன் கில் நிதானம் காட்டிய நிலையில், 6வது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் ஒரு சிக்சர், இரு பவுண்டரி அடித்து குஜராத் அணியின் ஸ்கோரை 50ஆக உயர்த்தினார்.

பின்னர் ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் அதிரடிக்கு கியரை மாற்றிய அவர், கார்த்திகேயா பந்தில் சிக்சர் அடிக்க முயன்று 56 ரன்களில் வெளியேறினார். பின்னர் விஜய் சங்கர் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் மூவரும் ஒரே போல் லாங் ஆன், லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் குஜராத் அணி சிக்கலில் சிக்கியது.

14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 113 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதையடுத்து பியூஷ் சாவ்லா வீசிய 15வது ஓவரில் அபினவ் மனோகர் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 17 ரன்களை சேர்த்தார். பின்னர் அடுத்த 2 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. பின்னர் 18வது ஓவரை வீச கேமரூன் க்ரீன் அழைக்கப்பட்டார். இந்த ஓவரை டார்கெட் செய்த அபினவ் மனோகர், 2 சிக்சர்களை அடித்தார். அதேபோல் கடைசி பந்தில் மில்லரும் தன்பங்கிற்கு ஒரு சிக்ஸை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசப்பட்டது.

19வது ஓவரில் அபினவ் மனோகர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த டிவாட்டியா முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். தொடர்ந்து மில்லரும் 2 சிக்சர்களை விளாச, குஜராத் அணியின் ஸ்கோர் 19 ஓவர்கள் முடிவில் 191ஆக உயர்ந்தது. கடைசி ஓவரில் 2 சிக்சர்கள் அடிக்க, குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவரில் மட்டும் குஜராத் அணி 77 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, April 25, 2023, 21:31 [IST]
Other articles published on Apr 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+