Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்தான்ஸ் ஹேப்பி அண்ணாச்சி.. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு.. அணித்தேர்வில் ஹர்திக் கொடுத்த ட்விஸ்ட்!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் குவாலிஃபையர் 2வில் இன்று மும்பையும் குஜராத் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது . இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பு அகமதாபாத்தில் லேசாக மழை தூரல் இருந்தது. ஆனால் நேரம் ஆக ஆக மழை அதிகரித்தது. இதன் காரணமாக ஆட்டத்தை திட்டமிட்டபடி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், 7 மணியளவில் நடுவர்கள் ஆடுகளத்தை பரிசோதனை செய்தனர்.

IPL 2023: Mumbai Indians won the toss and chose to bowl against Gujarat Titans in the Qualifier 2

இதையடுத்து 7.45 மணிக்கு டாஸ் போடப்படும் என்றும், 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா பேசுகையில், சேஸிங் செய்வது எங்களுக்கு சாதகமாக இருக்கும். அதனால்; சேஸிங் செய்யவே விரும்புகிறோம். மும்பை அணியில் ஏராளமான புதிய வீரர்கள் இருக்கிறார்.

இதுபோன்ற சூழலில் மும்பை அணியினர் ஏற்கனவே ஏராளமான முறை விளையாடி இருக்கிறோம். நடப்பு சீசனை மோசமாக தொடங்கினாலும், இப்போது அணியாக முழுமையாக இருக்கிறோம். இந்தப் போட்டியை பொறுத்தவரை ஷோக்கின் நீக்கப்பட்டு குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் பந்துவீச்சை செய்யவே விரும்பினோம். நாக்ன் அவுட் மற்றும் பிளே ஆஃப் போட்டிகள் எப்போதுமே சுவாரஸ்யமானது. இதில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் நாங்கள் நிறைவாக ஆடினாலே போதும் என்று நினைக்கிறேன். குஜராத் ரசிகர்கள் ஆதரவு எப்படி இருக்கும் என்பது நன்றாக தெரியும். இன்றைய ஆட்டத்தில் ஷனகா மற்றும் நலக்கண்டே நீக்கப்பட்டு ஜோஷ் லிட்டில் மற்றும் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குஜராத் அணி விவரம்: சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அஹ்மத், முகமது ஷமி

மும்பை அணி விவரம்: இஷான் கிஷன், ரோகித் சர்மா, க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால்

Story first published: Friday, May 26, 2023, 20:01 [IST]
Other articles published on May 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+