மும்பை : ஐபிஎல் தொடரில் இன்றைய முக்கிய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை.
இதனால் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டனாக தலைமை தாங்குகிறார். இன்றைய ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மகன் முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய ஆடுகளம் காய்ந்த நிலையில் இருப்பதால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சூர்யகுமார் கூறினார்.
ரோகித் சர்மாவுக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து பேசிய கேகேஆர் கேப்டன் நிதிஷ் ரானா, தாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இரண்டாவது பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இன்றைய ஆட்டத்தில் சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பங்கேற்பது இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது, அர்ஜூன் டெண்டுல்கர் , இடது கை வேகப்பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால், இன்றைய ஆட்டத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்பப்படுகிறது. அர்ஜூன் டெண்டுல்கரின் உழைப்புக்கு கிடைத்த பரிசு இன்று ஜாகீர் கான் பாராட்டியுள்ளார்.