ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா.. மும்பை அணி ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணமே வேறு?
மும்பை : ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
எனினும் கடந்த 2 சீசனாக அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட வர முடியவில்லை. இதனால் இந்த சிசனில் பெரிய அளவில் சாதிக்க வேண்டிய நெருக்கடி மும்பை அணிக்கு ஏற்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மோசமான ஃபார்ம்
இதே போன்று ஆஸ்திரேலிய அணி ரிச்சர்ட்சனும் மும்பை அணியிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் கோல்டன் டக்குகளை பெற்றுவிட்டு ஐபிஎல் தொடருக்கு திரும்புகிறார். இஷான் கிஷனோ இரட்டை சதம் அடித்த பிறகு அம்னீஷியா வந்தது போல் பேட்டிங் செய்து வருகிறார்.

வெளிநாட்டு வீரர்கள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள டிவால்ட் பிரவீஸ், டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், டிம் டேவிட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், இந்த வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாடுவார்கள் என்று இன்னும் தெரியாது. இதனால் ஒட்டுமொத்த மும்பை அணியுமே ரோகித் சர்மாவை நம்பி தான் இருக்கிறது.

ரோகித் எடுத்த முடிவு
இந்த நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்காக ரோகித் சர்மா ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன் படி, ஐபிஎல் தொடர்களில் சில போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் மாற்று கேப்டன்
அதன் படி, ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் மும்பை அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை அணியிலேயே இடம்பெறுவார் என்றும், டிரஸ்ஸிங் ரூமில் இருந்து அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications