”பாரபட்சம் பார்க்காம அடிக்கிறான்” பல்தான்ஸை பொளந்த குஜராத்.. கலாய்க்கும் ரசிகர்களின் தெறி மீம்ஸ்!
அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

நேற்றையப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை சில்லினு ஒரு காதல் படத்தில் சூர்யா, வடிவேலுவை பார்த்து, "நீ ஊருக்கு கிளம்பு" என்று சொல்வார். அதனை மாற்றி, ரசிகர்கள் ரோகித் சர்மாவை பார்த்து, "நீ லண்டன்-க்கு கிளம்பு.. போ" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் கலக்கல்.

ஐபிஎல் தொடரில் 3வது சதத்தை சுப்மன் கில் பதிவு செய்தார். ஏற்கனவே ஆர்சிபி அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய சுப்மன் கில், நேற்று மும்பை அணிக்கு எதிராக 60 பந்துகளில் 129 ரன்களை விளாசினார். இதனை பார்த்து ஆர்சிபி ரசிகர்கள், "எங்கள அடிச்ச அதே அடி.. பாரபட்சம் பார்க்காம அடிக்கிறான்" என்று வடிவேலு சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

நேற்றையப் போட்டியில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில் கொடுத்த கேட்சை டிம் டேவிட் தவறவிட்டார். இதனையடுத்து 129 ரன்கள் விளாசிய கில், மீண்டும் டிம் டேவிட்-க்கு கேட்ச் கொடுத்தார். அதனை லாவகமாக பிடித்து அசத்தினார். இதனை கோவை பிரதர்ஸ் படத்தில் வடிவேலு பேட்டிங் செய்யும் போது திடீரென கேட்ச் பிடித்துவிடுவார். இந்த காட்சியை டிம் டேவிட் கேட்சுடன் ஒப்பிட்டு மும்பை ரசிகர்கள் திட்டுவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

234 ரன்களை மும்பை அணி சேஸிங் செய்யும் போது, முதல் 10 ஓவர்களில் 110 ரன்களை குவித்தது. இதனால் அடுத்த 10 ஓவர்களில் 124 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனை எந்திரன் ரோபோவை பார்த்து கும்பிடும் மக்கள், அவர் ஆயுதங்களை கீழே போடும் போது, "என்னாடி இது" என்று புலம்புவார்கள். இந்த காட்சியை ஒப்பிட்டு ரசிகர்கள் உருவாக்கிய மீம் ஃபன் ரகம்.

இதுவரை பிளே ஆப்பில் எந்த அணியும் 200க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்து வென்றதில்லை. நேற்று குஜராத் அணி 234 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து சேஸ் செய்த மும்பை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் மும்பை அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனை யாரடி நீ மோகினி படத்தில் வரும் ரகுவரன், தனுஷிடம், "நீ இவ்வளவு தூரம் வந்ததே பெருசு" என்று சொல்லுவார். அதனை மாற்றி, "இந்த பவுலிங் யூனிட் வச்சுட்டு இவ்ளோ தூரம் வந்ததே பெருசு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரசிகர்களுக்கு ஆறுதல்.


Click it and Unblock the Notifications