Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வரலாற்றை மாற்றுமா மும்பை அணி? மீண்டும் வந்த பெஹ்ரண்டார்ஃப்.. டாஸ் வென்று ஐதராபாத் பந்துவீச்சு!

ஐதராபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஹாட்ரிக் வெற்றியை எந்த அணி பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

IPL 2023: Sunrisers Hyderabad won the toss and Chose to bowl against Mumbai Indians

இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதலில் பேட்டிங் ஆடிய இரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் ஐதராபாத் அணிக்கு எதிராக வரலாற்றை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐதராபாத் அணி தரப்பில் கடந்த போட்டியில் களமிறக்கப்பட்ட அதே அணியே களமிறக்கப்பட்டுள்ளது. அதேபோல் மும்பை அணி தரப்பில் டூவன் யான்சன் நீக்கப்பட்டு, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை அணியின் பந்துவீச்சு பலம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அர்ஜூன் டெண்டுல்கர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரின் பந்துவீச்சு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

IPL 2023: Sunrisers Hyderabad won the toss and Chose to bowl against Mumbai Indians

ஐதராபாத் அணி விவரம்: மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக், ராகுல் த்ரிப்பாட்டி, மார்க்ரம், கிளாஸன், அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சன். புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, நடராஜன்

IPL 2023: Sunrisers Hyderabad won the toss and Chose to bowl against Mumbai Indians

மும்பை அணி விவரம்: ரோகித் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் க்ரீன், அர்ஜூன் டெண்டுல்கர், நேஹல் வதேரா, ஹிர்த்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, பெஹ்ரண்டார்ஃப

Story first published: Tuesday, April 18, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+