Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR vs MI - பார்ம்க்கு திரும்பிய சூர்யகுமார், இஷான்.. மும்பை அணி 2வது வெற்றி.. வெங்கடேஷ் சதம் வீண்

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடியது. இதில் மும்பை அணி சார்பாக அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 51 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார். கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியதால், கேகேஆர் அணி 45 ரன்களை மட்டுமே சேர்த்தது.இதனைத் தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

IPL 2023 - suryakumar and ishan kishan hits back KKR as MI registered the third win

இந்த கூட்டணி தொடகக்த்திலேயே அதிரடியாக விளையாட, அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 25 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். இதில் 5 சிக்சரும், 5 பவுண்டரிகளும் அடங்கும். ஃபார்மில் இல்லாமல் தவித்த சூர்யகுமார் யாதவ், தற்போது பழைய ஆட்த்திற்கு திரும்பியதற்கான சமிக்கைகளை காட்டினார்.

25 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் 43 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். டிம் டேவிட் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க, மும்பை அணி வெற்றி இலக்கை 17.4வது ஓவரிலேயே வெறும் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டியது. இதன் மூலம் மும்பை அணி 2வது வெற்றியை பதிவு செய்தது.

Story first published: Sunday, April 16, 2023, 19:46 [IST]
Other articles published on Apr 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+