Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு இன்னொரு "C" கொடுங்க.. அம்பானிக்கு போன் செய்த ஹர்திக் பாண்டியா.. ட்ரெண்டாகும் மிரட்டல் மீம்!

மும்பை: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் ஜாலியான மீம்ஸை பார்க்கலாம்.

மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல் 8 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ள ரோகித் சர்மா, கடந்த 3 சீசன்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தார். இதனிடையே சில வாரங்களுக்கு முன் குஜராத் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் தாய் வீடான மும்பை அணிக்கு திரும்பினார்.

IPL 2024 - Fantastic Memes from Social Media after Hardik Pandya appointed as a New Captain of Mumbai Indians

இதனால் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்று ரசிகர்கள் கணித்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வுக்கு பின் கேப்டன்சி மாற்றம் இருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை அணி ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் மும்பை அணியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டது குறித்து சமூல வலைதளங்களில் மீம் இன்று ட்ரெண்டாகி வருகிறது. அதில் சிவாஜி படத்தில் ரஜினிகாந்த், டாலர்ஸ், பேங்க் பேலன்ஸ், லேண்ட்ஸ், பாண்ட்ஸ், ஸ்விங் பேங்க் பணம் என்று இத்தனை கோடி கருப்பு பணம் இருக்கு.. அதுல பாதி எனக்கு.. மீதி உனக்கு என்று டீல் பேசுவார். அந்த காட்சியில் வரும் ரஜினிகாந்தை போல் ஹர்திக் பாண்டியா அம்பானியிடம் பேசுவதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.

IPL 2024 - Fantastic Memes from Social Media after Hardik Pandya appointed as a New Captain of Mumbai Indians

அதில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்ப ரூ.15 கோடியை அம்பானி தரப்பில் வழங்கப்பட, அதற்கு ஹர்திக் பாண்டியா, எனக்கு இன்னொரு C வேணும் என்கிறார். அதற்கு அம்பானி, ஓ.. டிரேட்-க்கு பின்னாடியா.. மினி ஏலத்திற்கு பின்னாடியா.. என்று மறுகேள்வி கேட்கிறார். அதற்கு ஹர்திக் பாண்டியா, பேருக்கு பின்னாடி என்று பதில் அளிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மீம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Saturday, December 16, 2023, 9:28 [IST]
Other articles published on Dec 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+