மும்பை வீரர்களுக்கே சொல்லவில்லை.. இதயம் நொறுங்கிவிட்டது.. வேதனையில் பதிவிட்ட சூர்யகுமார் யாதவ்!
மும்பை: மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், தனது இதயம் நொறுங்கிவிட்டதாக சக மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் பதிவிட்டுள்ளார்.
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நட்சத்திர வீரர் ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் இருந்து மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாகவே கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் கேப்டனுக்கான ரேஸில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரும் இருந்தனர். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் வருகையின் போது, பும்ரா தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது சக வீரரான சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியை பதிவிட்டு அதிருப்தையை வெளிப்படுத்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.
மும்பை அணியால் சூர்யகுமார் யாதவ் வாங்கப்பட்டதற்கு ரோகித் சர்மாவே முதன்மை காரணம். கேகேஆர் அணிக்காக சூர்யகுமார் யாதவ் விளையாடி இருந்தாலும், உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிய போதே சூர்யகுமார் யாதவின் திறமையை ரோகித் சர்மா அறிந்தவர். இதுகுறித்து 2011ஆம் ஆண்டிலேயே ரோகித் சர்மா தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருப்பார்.
அதன்பின் சூர்யகுமார் யாதவை மும்பை அணியில் கொண்டு வந்து வாய்ப்பு வழங்கியதோடு, அவருக்கு இந்திய அணியில் நிரந்தர வீரராக மாற்றியதிலும் ரோகித் சர்மாவின் பங்கு அதிகம். இதனால் தனது கேப்டனுக்காக சூர்யகுமார் யாதவ் ஓபனாக பேசியிருப்பது பாராட்டுகளை பெற்று வருகிறது. அதேபோல் கேப்டன்சி மாற்றம் குறித்து சக வீரர்களுக்கு கூட மும்பை அணி நிர்வாகம் ஆலோசிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
Story first published: Saturday, December 16, 2023, 12:28 [IST]
Other articles published on Dec 16, 2023


Click it and Unblock the Notifications