Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குயில புடுச்சி கூண்டில் அடைச்சி கூவச் சொல்கிற உலகம்.. இனி மும்பையில் டம்மி பாம்பாக மாறிய ரோகித்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக சிறந்த கேப்டன்களில் ஒருவர் என்றால் அது நிச்சயமாக ரோகித் சர்மா தான். 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்திருக்கிறார்.

இதில் 2019, 2020 என தொடர்ந்து இரண்டு முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Rohit sharma

இதனால் ரோகித் சர்மாவின் நிலை மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன என்று கேள்விக்குறி எழுந்து இருக்கிறது. பலரும் ரோகித் சர்மா அணி மாறி விடுவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் மாறுவதற்கான காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதனால் ரோகித் சர்மா மும்பை அணியிலே தொடர வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கிங் ஆக இருந்த ரோகித் சர்மா தற்போது டம்மி பாம்பாக மாற்றப்பட்டு இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது கேப்டனாக இல்லை என்பதால் இனி அவரை பேட்டிங்கிற்கு மட்டும் பயன்படுத்த மும்பை அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. அதாவது இம்பாக்ட் பிளேயர் விதிப்படி ரோகித் சர்மாவை தொடக்க வீரராக பயன்படுத்தி கொண்டு பந்துவீச்சில் ஓய்வு கொடுத்து விடலாம் என்ற முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி வந்துவிட்டதாக தெரிகிறது.

இதன் மூலம் ரோகித் சர்மா தன்னுடைய உடல் தகுதியை பாதுகாத்துக் கொள்வார்.மேலும் பேட்டங்கில் அவர் தன்னுடைய 100 சதவீத கவனத்தை செலுத்த முடியும் இதன் மூலம் பழைய ரோகித் ஷர்மாவை களத்தில் பார்க்கலாம். எனினும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

இதனால் பந்து வீசும் போது ரோகித் சர்மா களத்தில் இல்லை என்றால் அது நிச்சயம் ஏமாற்றமாக தான் போய் முடியும். சிங்கம் போல் இருந்த ரோகித் சர்மாவை தற்போது கூண்டில் அடைத்து வைத்திருப்பதாக ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கிறது.

அதாவது ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடாமல் இருந்தால் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் வேறு ஒரு வீரரை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளலாம் என்பதுதான் அது. ரசிகர்களின் இந்த பயம் நியாயமானது. முதல் ஐந்து போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வாய்ப்பு கொடுக்கும். அதில் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்றால் அணியை விட்டு செல்லவே வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Saturday, December 16, 2023, 7:30 [IST]
Other articles published on Dec 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+