For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹர்திக்கை வாங்க ரூ.100 கோடி.. குஜராத் அணிக்கு கொடுத்த மும்பை.. அம்பானி குடும்பம் செய்தது சரியா?

மும்பை: குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கம்பேக் கொடுத்துள்ள நிலையில், இதற்காக குஜராத் அணி நிர்வாகத்திற்கு அம்பானி குடும்பத்தினர் தரப்பில் ரூ.100 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், சிஎஸ்கே அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றால், மும்பை அணி நிர்வாகம் உடனடியாக 2 கோப்பைகளை வெல்வதற்கான தீவிரத்தை காட்டும் என்று கூறியிருப்பார். ஆனால் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

IPL 2024 : Mumbai Indians paid Rs.100 Crores to Gujarat Titans to get Hardik Pandya within the rules of IPL Council

ஆனால் மும்பை அணி கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. இதற்கு மும்பை அணி வீரர்கள் சிலர் சிதறியதே காரணமாக பார்க்கப்பட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, ராகுல் சஹர், பொல்லார்ட் உள்ளிட்டோர் விலகினர். அதில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2வது சீசனில் இறுதிப்போட்டி வரை சென்று 2 பந்துகளில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் கரியர் உச்சத்திற்கு சென்றது. கேப்டனாகவும், வீரராகவும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வருவதை மும்பை அணி நிர்வாகம் கண்காணித்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில் ரோகித் சர்மா 3 ஆண்டுகளாக கேப்டனாக கோப்பை வெல்லாத சூழலில், அவர் 36 வயதை எட்டியதை காரணமாக வைத்து அவரை பதவி நீக்கம் செய்ய முடிவு செய்தது. ஆனால் அதற்கு முன் ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வருவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டது. இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உயர்ந்த பின், குஜராத் அணி நிர்வாகத்திடம் பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள் கோரியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவின் கோரிக்கைகளை ஏற்றுள்ளது. இதனால் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்க, குஜராத் அணி நிர்வாகம் தரப்பில் பணத்தின் மூலமாக ஒப்பந்தம் முடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஹர்திக் பாண்டியாவை வாங்கிய ரூ.15 கோடி ஒப்பந்தம் போக, நிர்வாகங்களுக்கு இடையில் ரூ.100 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் விதிகளின் படி வீரர்களுக்கான ஒப்பந்த தொகை போக, அந்த அணி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்குவதற்கும் இன்னொரு தொகை அளிக்கப்படும். அதாவது ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான ஒப்பந்தம் தொகை ரூ.15 கோடியாகும்.

அதனை தவிர்த்து ஹர்திக் பாண்டியாவை அளிப்பதற்கு மும்பை அணி தரப்பில் குஜராத் அணிக்கு அளிக்கப்படும். அந்த தொகை சம்மந்தப்பட்ட அணிகளுக்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் மட்டுமே தெரியும். இதனால் மும்பை அணி நிர்வாகம் விதிகளுக்கு புறம்பாக ரூ.100 கோடி அளிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. ஐபிஎல் விதிகளுக்கு உட்பட்டே மும்பை அணி நிர்வாகம் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 25, 2023, 10:48 [IST]
Other articles published on Dec 25, 2023
English summary
IPL 2024 : Mumbai Indians paid Rs.100 Crores to Gujarat Titans to get Hardik Pandya within the rules of IPL Council
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+