உடல் மண்ணுக்கு உயிர் மும்பைக்கு..! சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த ரோகித்.. சரிக்கட்டிய அம்பானி
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு அந்த பதவிக்கு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஐந்து கோப்பையை பெற்று தந்த ரோகித் சர்மாவை மும்பை அணி அவமானப்படுத்தி விட்டதாக அவர்களுடைய ரசிகர்கள் கருதுகின்றனர். இதனால் மும்பையை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்வதை பல ரசிகர்கள் நிறுத்தினர்.

இதன் காரணமாக நம்பர் ஒன் அணியாக இருந்த மும்பை அணி தற்போது இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த செயல் குறித்து ரோகித் சர்மா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். ரோகித் சர்மா கோபமாக இருப்பதாகவும் அவர் வேறு அணிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானது.
எனினும் ரோகித் சர்மாவை சரி கட்டும் முயற்சியில் அம்பானி குடும்பம் ஈடுபட்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நடத்தும் பள்ளி ஒன்றில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா அவருடைய மனைவி ரித்திகா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதன் மூலம் மும்பை அணிக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அம்பானி குடும்பம் இந்த காயை நகர்த்தியிருக்கிறது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்து மும்பை அணி மீது ரோகித் சர்மாவுக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்க மாட்டார் என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள ரோஹித் சர்மா ரசிகர்கள், மும்பை செய்தது மன்னிக்க முடியாத செயல் என்றும் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவின் குழந்தை பங்கேற்றதால் தான் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் இல்லையெனில் தன்னுடைய கோபத்தை காட்டும் விதமாக புறக்கணித்து இருப்பார் என்றும் கூறுகின்றனர்.
Story first published: Sunday, December 17, 2023, 12:26 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications