Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அணியை சும்மா விடுவதாக இல்லை.. பும்ராவை வைத்து அடுத்த ஆப்பை ரெடி செய்த ரோகித்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு தயாராக பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் போக்கு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் மும்பை அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா தற்போது கேப்டனாக இல்லை. ஹர்திக் பாண்டியா தான் புது கேப்டன் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் ரோகித் சர்மா கோபத்தில் இருக்கிறார் என்று தெரிந்தும் தங்களது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்து இருக்கிறது.

IPL 2024 - Rohit sharma big move against mumbai indians

இதனால் மும்பை அணியில் பிளவு ஏற்பட்டு இருப்பதாக ஏற்கனவே நாம் பல செய்தியில் பார்த்து விட்டோம். இந்தப் பிளவு இல்லை என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆவதற்கு ரோகித் சர்மாவுக்கு கோபம் இல்லை என்றும் இதுவரை எந்த ஒரு விளக்கமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடிமடியில் கையை வைக்கும் ஒரு வேலையை ரோகித் சர்மா செய்து இருக்கிறார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பவுலர் என்றால் அது பும்ரா தான். மும்பை இந்தியன்ஸ் அணி பெற்ற வெற்றிக்கு பும்ராவின் வேகப்பந்துவீச்சு தான் காரணம். இதனால் பும்ராவை வெகுவாக மும்பை இந்தியன்ஸ் அணி நம்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்திருந்தது.

பும்ரா தொடர்ந்து விளையாட இருப்பதால் அவருக்கு இந்த ஓய்வு தேவை என பிசிசிஐ நினைத்தது. ஆனால் உள்ளே புகுந்த ரோகித் சர்மா, பும்ராவை வேண்டுமென்றால் ஐபிஎல் தொடரில் ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லுங்கள். ஆனால் இந்தியா இங்கிலாந்து தொடரில் அவருடைய பங்களிப்பு மிகவும் முக்கியம் என கூறிவிட்டார். பும்ரா இல்லாமல் இந்தியாவால் வெற்றி பெறுவது கடினம் என்றும் .உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாம் தகுதி பெற வேண்டும் என்றால் இந்த தொடரை வெல்ல வேண்டும்.

அதற்கு பும்ரா கண்டிப்பாக ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என ரோகித் குறிப்பிட்டதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பும்ராவும் தனக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்ற கோபத்தில் இருப்பதால் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட போவதாக முடிவெடுத்து இருக்கிறார்.

இதனால் பும்ராவுக்கு ஏதேனும் காயம், உடல் தகுதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அவரால் மும்பையின் சில போட்டிகளில் விளையாட முடியாது. இப்படி ஒரு பிரச்சனை நிகழும் என தெரிந்தே ரோகித் சர்மாவும் பும்ராவும் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

Story first published: Wednesday, February 14, 2024, 14:11 [IST]
Other articles published on Feb 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+