For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா எந்த ஐபிஎல் அணியிலும் விளையாட முடியாது.. மும்பை வைத்த செக்! இது தான் ஒரே வழி

Rohit sharma : மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி அவமரியாதை செய்யும் விதமாக அவரிடம் ஆலோசனை செய்யாமலேயே கேப்டன் பதவியை விட்டு தூக்கியது.

மேலும் குஜராத் அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவை வாங்கி அவருக்கு அந்த பதவியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை ஏன் தூக்கினோம் என்று மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

IPL 2024 - Rohit sharma cant able to leave Mumbai indians - Here is the Reason

அதில் பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை என்பதால் அவருக்கு அழுத்தத்தை குறைக்கவே இந்த முடிவை எடுத்ததாக கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரோகித் சர்மா மனைவி ரித்விக்கா, இதில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதனால் ரோகித் சர்மாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் விரிசல் ஏற்பட்டிருப்பது உறுதியாக இருக்கிறது. இதனால் ரோகித் சர்மா வேறு அணிக்கு விளையாட முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா நினைத்தாலும் அவரால் மும்பை அணியை விட்டு வெளியேற முடியாது. அந்த வகையில் ஐபிஎல் விதியை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு செக்கு வைத்து இருக்கிறது.

ஐபிஎல் விதிப்படி ஒரு வீரர் ஒப்பந்தமான பிறகு அந்த அணியை விட்டு விலகி வேறு அணிக்கு செல்ல முடியாது. அவ்வாறு முயற்சி எடுத்தால் கூட புகாருக்குள்ளான வீரர் அந்த ஐபிஎல் தொடரிலே விளையாட முடியாத நிலை ஏற்படும். இப்படித்தான் ஜடேஜா 2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியில் இருந்து சிஎஸ்கே அணிக்கு செல்வதாக முயற்சிகள் எடுத்தார்.

இதனை எடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.அடுத்து அந்த ஐபிஎல் சீசனில் விளையாட ஜடேஜாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே போல் ஒரு சூழல் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல நடவடிக்கை எடுத்தாலும் அவருக்கு தடை விதிக்கப்படும். இதனால் ரோகித் சர்மா நடப்பு சீசனில் மும்பை அணிக்கு விளையாடியே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்.

வேண்டுமானால் ரோஹித் சர்மா தமக்கு காயம் ஏற்பட்டதாக கூறி நடப்பு தொடரில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஈகோ பெரியதா பணம் பெரியதா என்று வந்தால் வீரர்கள் பணத்தை தான் தேர்ந்தெடுப்பார்கள். ரோகித் சர்மாவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி 16 கோடி ரூபாய் ஆண்டுக்கு கொடுத்து வருகிறது. இதனால் தமது ஈகோவையும் மீறி நடப்பாண்டில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக விளையாடிய தீர வேண்டும். அடுத்த ஆண்டு மெகா ஏலம் வருவதால் அப்போது ரோகித் சர்மா வேறு அணிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கலாம்.

Story first published: Wednesday, February 7, 2024, 10:42 [IST]
Other articles published on Feb 7, 2024
English summary
IPL 2024 - Rohit sharma cant able to leave Mumbai indians - Here is the Reason ரோகித் சர்மா எந்த ஐபிஎல் அணியிலும் விளையாட முடியாது.. மும்பை வைத்த செக்! இது தான் ஒரே வழி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+