நீ தான் அடுத்த கேப்டனா? எப்படி அந்த பதவி வரும் என்று பார்க்கிறேன்..ஹர்திக்கிற்கு கட்டம் கட்டிய ரோகித்
மும்பை : ஐபிஎல் தொடரால் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது தான் இதற்கு ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது.
இதனால் ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மாவின் விசுவாசிகளான சூரிய குமார் யாதவ், இஷான் கிஷன், பும்ரா போன்ற வீரர்கள் எல்லாம் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மும்பை அணியின் இந்த முடிவை கொஞ்சமும் எதிர்பார்க்காத ரோகித் சர்மா தற்போது ஹர்திக் பாண்டியா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால் ரோகித் சர்மா ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்ற முடிவில் இருந்தார்.
இதன்மூலம் டி20 உலக கோப்பையில் தான் விளையாடப் போவதில்லை என்றும் ரோகித் சர்மா முடிவு எடுத்திருந்தார். இதன் காரணமாக அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தம்மை கேப்டனாக ஆக்கினால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வர தயார் என்று கூறி ரோகித் சர்மாவின் இடத்திற்கு ஆப்பு வைத்தார்.
இதனை கொஞ்சம் எதிர்பார்க்காத ரோகித் சர்மா தற்போது ஹர்திக் பாண்டியாவை பழி வாங்க காத்திருக்கிறார். அதன்படி அடுத்த டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா வருவதற்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் தான் அந்த பதவியில் இருந்து விலகினால் மட்டுமே ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைத்த ரோகித் சர்மா ஹர்திக்கிற்கு அந்த பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக தற்போது டி20 உலக கோப்பையில் விளையாட போகிறேன் என்று பிசிசிஐ இடம் தெரிவித்திருக்கிறார்.
என்று செய்திகள் வெளியாகி உள்ளது
இதன் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தான் கேப்டன் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்திய அணிக்கும் கேப்டனாக மாறிவிடலாம் என எதிர்பார்த்த ஹர்திக் பாண்டியாவின் கனவு நிறைவேறாமல் போய்விடும். ரோஹித் சர்மாவின் இந்த நகர்வு மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா விளையாடுகிறேன் என முடிவு எடுத்து விட்டால் விராட் கோலியும் டி20 அணிக்கு திரும்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 17, 2023, 13:03 [IST]
Other articles published on Dec 17, 2023


Click it and Unblock the Notifications