மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணியில் எதுவுமே சரி இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. ரோகித் சர்மாவுக்கும், ஹர்திக் பாண்டியாவுக்கும் பனி போர் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி அதனை உறுதியாக்கியது. புதிய கேப்டனாக பதவியேற்றுள்ள ஹர்திக் பாண்டியாவுக்கு பல வீரர்கள் ஆதரவும் தெரிவிக்கவில்லை.

மேலும் ரோகித் சர்மாவின் பேச்சையும் ஹர்திக் பாண்டியா கேட்பதில்லை என்று பல குற்றச்சாட்டு இருந்தது. அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவை விரும்பாத ரசிகர்கள் பலரும் அவருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடப் போகும் கடைசி சீசன் இதுதான் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்பட போகிறது. இந்த மெகா ஏலத்தின் முன்பே ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகி வேறு அணிக்கு மாற்றுதலாக போகிறார் என்ற செய்திகள் வெளியாகிறது. ரோகித் சர்மா, சன்ரைசர்ஸுக்கு போகப் போகிறார், சிஎஸ்கே போகப் போகிறார் என்ற பல செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது லக்னோ அணி தான் ரோகித் சர்மாவை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக உறுதியான செய்திகள் வெளிவந்துள்ளது.ஏனென்றால் ஐபிஎல் தொடரில் புதிய அணிகள் ஏலம் விடப்பட்ட போது கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணியை அதன் நிர்வாகிகள் வாங்கி இருக்கிறார்கள்.
இதனால் ரோகித் சர்மா போன்ற ஒரு ஸ்டார் அந்தஸ்துடைய வீரர்கள் லக்னோ அணிக்கு வந்தால் அந்த அணியின் வணிகமும் பெருமளவு ஹிட் அடிக்கும். இதன் காரணமாக ஐபிஎல் மெகா ஏலம் முன்பே ரோகித் சர்மாவை வாங்க லக்னோ அணி முடிவு எடுத்திருக்கிறது. நடப்பு சீசன் முடிந்தவுடன் மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மாவே விலகிவிடுவார் என்றும் அதன் பிறகு லக்னோ அவரை வாங்கிவிடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.