Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தை நடத்தப்போகும் முதல் பெண்.. யார் இந்த மல்லிகா சாகர்? பிசிசிஐ செய்த முக்கிய மாற்றம்!

மும்பை: ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண் முதல்முறையாக நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2024 - Who is Mallika Sagar? First Women auctioneer for the IPL 2024 auction at Dubai on December 19

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் சூழலில், மொத்தமாக மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும். அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இம்முறை ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ள ஏலதாரரை மாற்ற ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதிலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ஏலம் விட்டபோது எட்மெடாஸ் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருகிறார். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார். இது ரசிகர்ளிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Tuesday, December 5, 2023, 16:42 [IST]
Other articles published on Dec 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+