2025ம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம்.. அடுத்த ஆண்டில் ஓய்வை அறிவிக்கும் ரோகித் சர்மா? எப்படி தெரியுமா?
மும்பை: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரே மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா விளையாடும் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகள் 5 ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையுடன் இருந்த ரோகித் சர்மாவை திடீரென அவமரியாதை செய்யும் வகையில் பதவிநீக்கம் செய்திருக்க கூடாது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.

அதேபோல் 36 வயதாகும் ரோகித் சர்மா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரின் போது 37 வயதினை எட்டுவார். இதனால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு கேப்டனாக்கியுள்ளது மும்பை அணி நிர்வாகம். ஆனால் இந்த அறிவிப்பை அவசர அவசரமாக மினி ஏலத்திற்கு முன்பாகவே அறிவித்தது ஏன் என்று இதுவரை விளக்கம் அளிக்கப்படவில்லை.
அதேபோல் ரோகித் சர்மாவின் பதவி நீக்கத்திற்கும், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி பொறுப்பு வழங்கப்பட்டதற்கும் மும்பை அணியின் ரசிகர்களும் தயாராக இல்லை. அதன் காரணமாகவே மும்பை அணியை ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வை நிறுத்தி வருகின்றனர். அதேபோல் ரோகித் சர்மாவின் அவமரியாதை அளிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரே ரோகித் சர்மாவுக்கான கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ரோகித் சர்மா இதுவரை விளையாடியதில்லை. அதேபோல் 2025ஆம் ஆண்டு மெகா ஏலம் நடக்கவுள்ளதால், ஒவ்வொரு அணியாலும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும்.
அதன்படி பார்த்தால் ஹர்திக் பாண்டியா, பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகிய 4 பேரை மட்டுமே தக்க வைக்க முடியும். இதனால் ரோகித் சர்மாவை தக்க வைத்தால் குறைந்தபட்சம் ரூ.11 கோடிக்கு தக்க வைக்கலாம். அவ்வளவு பெரிய தொகையில் தக்க வைக்கப்படுவதற்கான தேவை மும்பை அணிக்கு கிடையாது. இதனால் ரோகித் சர்மா அடுத்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
Story first published: Saturday, December 16, 2023, 10:57 [IST]
Other articles published on Dec 16, 2023


Click it and Unblock the Notifications