Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சச்சின், ரோஹித் முதல் பும்ரா வரை.. மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்திய 10 கேப்டன்கள் யார்?

தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத விதமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக டாஸ் நிகழ்வுக்கு வந்ததை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, பும்ரா 10வது கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஒரு காலத்தில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த ஒரு அணியை மாபெரும் சாம்பியன் அணியாக மாற்றிய பெருமை இந்த அணியின் கேப்டன்களையே சேரும். பும்ராவுக்கு முன் அந்த அணியை வழிநடத்திய கேப்டன்கள் யார் யார், அவர்களின் வெற்றி சதவீதம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 முதல் 2011 வரை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியை 55 போட்டிகளில் வழிநடத்தி 32 வெற்றிகளை தேடித்தந்தார். 2010ல் அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்றார். இதற்கிடையே ஷான் பொல்லாக் 4 போட்டிகளுக்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ ஒரு போட்டிக்கும் தற்காலிக கேப்டனாக செயல்பட்டனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் 2008 முதல் 2012 வரை 30 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 14 வெற்றிகளை பதிவு செய்தார்.

IPL 2026 From Rohit to Bumrah List of 10 Captains Who Led Mumbai Indians in IPL History

2013ம் ஆண்டு மும்பை அணிக்கு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் 6 போட்டிகளில் கேப்டனாக இருந்தார். அதன்பின் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலையெழுத்தே முழுமையாக மாறியது. கேப்டன் பொறுப்பு அதிரடி வீரர் ரோஹித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2013 முதல் 2023 வரை 163 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, 91 வெற்றிகளை குவித்தது மட்டுமின்றி 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 என 5 முறை கோப்பையை வென்று கொடுத்து வரலாற்று சாதனை படைத்தார். இடையே கீரான் பொல்லார்ட் 9 போட்டிகளில் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.

ரோஹித் சர்மாவுக்கு பின் அதிரடி மன்னன் சூர்யகுமார் யாதவ் 4 போட்டிகளில் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றார். அதன்பின் 2024ல் ஹர்திக் பாண்டியா முழுநேர கேப்டனாக அதிரடியாக நியமிக்கப்பட்டார். அவர் இதுவரை 37 போட்டிகளில் அணியை வழிநடத்தி 15 வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது 2026 சீசனில் பும்ரா 10வது கேப்டனாக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்கள் பட்டியல்:

  1. ஹர்பஜன் சிங் - 30 போட்டிகள் - 14 வெற்றிகள் - 14 தோல்விகள் - வெற்றி சதவீதம் 46.66
  2. ஷான் பொல்லாக் - 4 போட்டிகள் - 3 வெற்றிகள் - 1 தோல்விகள் - வெற்றி சதவீதம் 75.00
  3. சச்சின் டெண்டுல்கர் - 55 போட்டிகள் - 32 வெற்றிகள் - 23 தோல்விகள் - வெற்றி சதவீதம் 58.18
  4. டுவைன் பிராவோ - 1 போட்டிகள் - 0 வெற்றிகள் - 1 தோல்விகள் - வெற்றி சதவீதம் 0.00
  5. ரிக்கி பாண்டிங் - 6 போட்டிகள் - 3 வெற்றிகள் - 3 தோல்விகள் - வெற்றி சதவீதம் 50.00
  6. ரோஹித் சர்மா - 163 போட்டிகள் - 91 வெற்றிகள் - 68 தோல்விகள் - வெற்றி சதவீதம் 55.82
  7. கீரான் பொல்லார்ட் - 9 போட்டிகள் - 5 வெற்றிகள் - 4 தோல்விகள் - வெற்றி சதவீதம் 55.55
  8. சூர்யகுமார் யாதவ் - 4 போட்டிகள் - 2 வெற்றிகள் - 2 தோல்விகள் - வெற்றி சதவீதம் 50.00
  9. ஹர்திக் பாண்டியா - 37 போட்டிகள் - 15 வெற்றிகள் - 22 தோல்விகள் - வெற்றி சதவீதம் 40.54
  10. ஜஸ்பிரித் பும்ரா - 2026 ஐபிஎல் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்
Story first published: Thursday, May 14, 2026, 21:06 [IST]
Other articles published on May 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+