பெட்ரோ"மேக்ஸ்" லைட்டேதான் வேணும்.. சிஎஸ்கே எடுத்த பெரிய ரிஸ்க்.. மேக்ஸ்வெல்லை தட்டி தூக்கிய கோலி!
சென்னை: ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
2021 ஐபிஎல் சென்னையில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஸ்மித் இதில் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
அதன்பின் பெரிய அளவில் வீரர்கள் யாரும் ஏலம் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை பல்வேறு அணிகளும் கடுமையாக முயன்றது.

சென்னை
மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே, பெங்களூர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. 7 கோடியை தாண்டி மேக்ஸ்வெல் ஏலம் சென்று கொண்டு இருந்தது. சிஎஸ்கே தொடக்கத்தில் இருந்து இவரை ஏலம் எடுக்க முயன்றது.

ஏலம்
அதன்பின் பெங்களூர் அணியும் இந்த போட்டியில் இணைந்தது. 9 கோடி ரூபாய்க்கு அதிகமாக மேக்ஸ்வெல் ஏலம் சென்று கொண்டே இருந்தது. சிஎஸ்கே அணியிடம் 19 கோடி ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் தீவிர முயற்சி செய்தது.

எத்தனை கோடி
10 கோடியை தாண்டிய பின்பும் மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே தீவிரம் காட்டியது. சிஎஸ்கே அணி தங்களிடம் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை பற்றி கவலையின்றி 12 கோடி வரை ரிஸ்க் எடுத்தது. ஆனாலும் ஆர்சிபி தொடர்ந்து மேக்ஸ்வெல்லை எடுக்க முயன்றது.

முடிவு
மேக்ஸ்வெல்லை தீவிர வேறு வீரரே தேவையில்லை என்பது போல சிஎஸ்கே களத்திற்கு வந்தது. அதன்பின் 14.25 கோடி வந்த பின் சென்னை அணி பின்வாங்கியது. இதனால் மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி ஏலம் எடுத்தது. 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் ஏலம் எடுத்தது.


Click it and Unblock the Notifications