ஏலத்தில் குளறுபடி.. சொன்னபடி செய்த ரோஹித் சர்மா.. கடைசி வீரராக எடுக்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கர்!
சென்னை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடருக்கான மினி ஏலம் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் தொடங்கிய ஏலம் தற்போது நடந்து முடிந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்தது. இந்த நிலையில் இன்று 292 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.

சேர்ப்பு
ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது மும்பை அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இவர் பெயர் இடம்பெற்றது பெரிய அளவில் சர்ச்சையானது.

திறமை
இவருக்கு திறமையே இல்லை. முதல்தர போட்டிகளில் பெரிய அளவில் ஆடவில்லை. பெரிதாக சாதிக்கவில்லை என்று இவருக்கு எதிராக விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனாலும் இவர் பெயர் ஏலத்தில் சேர்க்கப்பட்டது.

இல்லை
இன்று நடந்த ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் பெயர் குறிப்பிடப்படவில்லை. முதலில் வீரர்களை பெயரை சொல்லும் போது அர்ஜுன் பெயரை குறிப்பிடவில்லை. லிஸ்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இவர் பெயர் இடம்பெறவில்லை.

கடைசி வீரர்
இந்த நிலையில் கடைசியில் இவர் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. கடைசி வீரராக இவர் ஏலம் விடப்பட்டார். அதில் மும்பை அணி இவரை 20 லட்சத்திற்கு எடுத்தது.

விருப்பம் இல்லை
இவரை ஏலம் எடுக்க எந்த அணியும் விரும்பவில்லை. இதனால் ரோஹித் சர்மாவின் மும்பை அணி மட்டும் கடைசியாக எடுத்தது. இவருக்கு ஆடும் மும்பை அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications