Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காரணமே அஸ்வின்தான்.. கவுதமை ரூ.9.25 கோடிக்கு எடுத்தது ஏன்? தோனி களமிறக்கும் மாஸ் பிளான்

சென்னை: சிஎஸ்கே அணியில் கர்நாடகாவை சேர்ந்த மூத்த வீரர் கே கவுதமை தோனி
எடுத்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கு 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. புது புது
வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை ஒவ்வொரு அணியும் உருவாக்கி உள்ளது.

ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற அணிகள் இந்த ஏலத்திற்கு பின் மொத்தமாக மாற்றம்
அடைந்து இருக்கிறது. சென்னை அணியும் 6 புதிய வீரர்களை அணிக்குள் எடுத்து இருக்கிறது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் கர்நாடகாவை சேர்ந்த மூத்த வீரர் கே கவுதமை

தோனி எடுத்தது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணியில்

அஸ்வின் வளர்ந்து வந்த போதே அவருக்கு மாற்று வீரராக கவுதம் பார்க்கப்பட்டு

வந்தார். இரண்டு பேருமே நன்றாக பவுலிங் செய்ய கூடியவர்கள்.

அஸ்வின்

அஸ்வின்

ஆனால் அஸ்வின் தொடர்ந்து பார்மில் இருந்ததால் கவுதம் தனது வாய்ப்பை

இழந்தார். கவுதம், அஸ்வின் இருவரும் சென்னை போன்ற பிட்ச்களில் நன்றாக

பவுலிங் செய்ய கூடிய வீரர்கள். இவர்களின் ஆப் ஸ்பின் ஸ்டைல் கொஞ்சம் ஒரே மாதிரி இருக்கும்.

 ஸ்பின்

ஸ்பின்

அஸ்வின் போன பின் நல்ல இந்திய ஸ்பின் பவுலர் இல்லாமல் தோனி கஷ்டப்பட்டு

வருகிறார். இதனால்தான் கவுதமை எடுக்கும்படி தோனி மிகவும் உறுதியாக

இருந்தார் என்கிறார்கள். ஜலாஜ் சக்சேனா அல்லது கவுதம் இரண்டு பேரில் ஒருவரை

கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று இருந்துள்ளனர்.

பார்ம்

பார்ம்

சென்னை பிட்சில் கவுதம் கண்டிப்பாக கலக்குவார் . இவரின் பேட்டிங்கை சிஎஸ்கே

கருத்தில் கொள்ளவே இல்லை. இவரின் ஆப் ஸ்பின் மட்டுமே தோனியின் குறியாக

இருந்தது. அதனால் இவரை தோனி அணியில் எடுத்ததாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, February 23, 2021, 15:51 [IST]
Other articles published on Feb 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+